டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி முதல்வர் மீது மிளகாய் பொடி வீச்சு.. தடுக்க தவறிய போலீஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

மதிய உணவு இடைவேளைக்காக, புறப்பட்டு சென்ற முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது அங்கு மனு அளிப்பது போல் அமர்ந்திருந்த நபர் திடீரென பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை, தூக்கி வீசினார்.

 Chilli Powder Thrown At Delhi Cm Arvind Kejriwal

அப்போது, சற்று நகர்ந்ததால் கெஜ்ரிவாலின் மூக்கு கண்ணாடியில் மிளகாய் பொடி விழுந்தது. இதில், கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து, அனில்குமார் என்ற அந்த நபரை சுற்றிவ ளைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பா.ஜ.க. ஆட்சியின் மைய கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை, முதலமைச்சரைப் பாதுகாப்பதில் தோல்வி அடைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் லம்பா தெரிவித்தார்.

"டெல்லி காவல்துறை தலைமைச் செயலகத்தினுள் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க டெல்லி காவல்துறை பலமுறை தவறிவிட்டது என்றும், மத்தியில் ஆளும் பாஜக ஆணையின் படி இவ்வாறு செயல்படுவதாகவும் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஒரு அபாயகரமான தாக்குதல் என்று தெரிவித்தார் லம்பா.

இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, இது போன்றவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கு முன்னதாக, கெஜ்ரிவால் மீது மை மற்றும் செருப்பு வீசப்பட்டதும், பிரச்சாரத்தின் போது கன்னத்தில் அறைந்த சம்பவமும் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது..

English summary
Chilli Powder Thrown At Arvind Kejriwal, Delhi Police, which is controlled by the regime, has failed to protect the chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X