• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னய்யா சொன்னதையே சொல்லுறீங்க! பிரதமர் மோடியை தாக்கிய ராகுல்! சீனா பாலம் கட்டுவதால் ஆக்ரோஷம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாங்காங் ஏரியில் சீனா 2வது பாலம் கட்டும் நிலையில் ‛‛நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்'' என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு ராகுல் வெகுண்டெழுந்துள்ளார். சொன்னதையே சொல்லாமல் நாட்டை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. சதி வேலைகளை கைவிட மறுத்து சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய

  Pangong Tso பகுதியில் இரண்டாவது பாலம் கட்டும் China-வின் PLA #Defence

  2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.

   கிழக்கு பிராந்தியத்தில்...

  கிழக்கு பிராந்தியத்தில்...

  இந்நிலையில் தான் இந்தியாவின் அருணாச்சல்பிரதேசம் எல்லை பகுதிகளில் சீனா வாலாட்டி வருகிறது. குறிப்பாக அருணாச்சல் பிரதேசம் பகுதியில் சீனா தனது எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இதுபற்றி இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவு தளபதியும், லெப்டினன்ட் ஜெனரலுமான ஆர்பி கலிதா கூறியிருந்தார்.

  போக்குவரத்து மேம்பாடு

  போக்குவரத்து மேம்பாடு

  அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே சீனா கட்டுமான பணிகளை மேம்படுத்தி வருகிறது. போர்ச்சூழலை சந்திக்கும் வகையில் படைகளை அனுப்பி வைக்க ஏதுவாக சாலை, ரயில் வான்வழி போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்துகிறது. மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளையொட்டி கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை இந்தியா கண்காணித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

  பாங்காங் ஏரியில் 2வது பாலம்

  பாங்காங் ஏரியில் 2வது பாலம்

  இதற்கிடையே சீனா ஆக்கிரமித்துள்ள பாங்காங் டிசோ ஏரியில் அந்நாடு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பாலத்தை கட்டியது. இதன்மூலம் போர் தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும். இந்த நிலையில் லடாக் கிழக்கு பகுதியில் உள்ள பாங்காங் ஏரியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தை கட்டி வருவது தெரியவந்துள்ளது. இது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

  தீவிர கண்காணிப்பு

  தீவிர கண்காணிப்பு

  இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா 2வது பாலம் அமைப்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளது.

  வெகுண்டெழுந்த ராகுல்

  வெகுண்டெழுந்த ராகுல்

  இந்நிலையில் சீனா 2வது பாலம் கட்டும் விஷயத்தை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛பாங்காங் ஏரியில் சீனா முதல் பாலம் கட்டியபோது அதுபற்றி தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா கூறியது. தற்போது 2வது பாலம் கட்டும்போதும் நிலைமையை கண்காணிப்பதாக இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. இந்த விஷயத்தில் பயமுறுத்தும் செயல், சாதுவான பதில் ஆகியவை சரிப்பட்டு வராது. பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

  English summary
  Pangong 2nd bridge row: Congress Rahul Gandhi Slams PM Narendra Modi and says, ‛‛India's national security a is non negotiable. So PMmust defend the nation’’.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X