டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பகீர்.. மறுபடியும் வேலையை காட்டும் சீனா.. அக்சாய்சின் பகுதியில் ஹெலிபோர்ட் அமைக்கிறது.. வைரல் போட்டோ

பிரம்மாண்டமான ஹெலிபோர்ட் ஒன்றை அக்சாய் சின் பகுதியில் சீனா கட்டி வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: மறுபடியும் வேலையை காட்ட துவங்கி உள்ளது சீனா.. ஆக்கிரமித்து வைத்துள்ள அக்சாய் சின் பகுதியில் ஹெலிபோர்ட் ஒன்றை அந்நாட்டு ராணுவம் அமைத்து வருகிறதாம்.. இதனை செயற்கைகோள் படங்களும் உறுதி செய்துள்ளன.

கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது... இதற்கிடையே ஜுன் 15-ம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

China constructing heliport in occupied Aksai Chin

அப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தும், நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துவிட்டனர்.

உடனே சீனா தரப்பும், தங்களது 40 வீரர்கள் கொல்லப்பட்டதாக சொன்னது.. ஆனால், அதுகுறித்து தகவலை கடைசிவரை வெளியிடவில்லை. இதனால் இந்தியா-சீனா இடையே மனக்கசப்பு ஏற்பட்டது... அப்போதிருந்தே இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த போர் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பல சுற்றுப்பேச்சு வார்த்தை நடத்தின... ஆனாலும் பலனில்லை.. எல்லையில் நிறுத்தியுள்ள ராணுவ துருப்புகளை பின்வாங்கவும் 2 நாடுகளும் ஒப்புக்கொண்டன... இதில், சீனா சொன்னப்படி நடந்து கொள்ளவே இல்லை.. இப்போது மறுபடியும் இன்னொரு காரியத்தை செய்து வருகிறது. அது தொடர்பான ஒரு பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.

சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின் பகுதியில் ஒரு ஹெலிபோர்ட்டை கட்டி வருகிறதாம்.. அந்த ஹெலிபோர்ட் மிக பிரம்மாண்டமானது என்கிறார்கள்.. செயற்கைகோள் புகைப்படங்கள் எடுத்த போட்டோக்கள் மூலமாக இந்த ஹெலிபோர்ட் பற்றி தெரியவந்துள்ளது.

ஒரு பக்கம் சீனா.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான்.. இருமுனை தாக்குதலை சமாளிக்க முப்படைகளும் ரெடிஒரு பக்கம் சீனா.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான்.. இருமுனை தாக்குதலை சமாளிக்க முப்படைகளும் ரெடி

இந்த போட்டோக்களின்படி, அந்த ஹெலிபோர்ட் இந்தியாவின் தவுலத் பேக் ஓல்டி விமானதளத்துக்கு எதிரே இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது 16,700 அடி உயரத்தில், உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் 255 கிமீ டார்புக் - ஷியோக் - டிபிஓ சாலைக்கு பக்கத்திலேயே உள்ளது.. மேலும், இந்த ஹெலிபோர்ட் சுமார் 1,000 மீட்டர் ரன்வே கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. இது சம்பந்தமான படங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

English summary
China constructing heliport in occupied Aksai Chin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X