டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்?

இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தற்போது அறிவிக்கப்படாத பனிப்போர் நடந்து வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான யுத்தம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சீனா திபெத் மற்றும் நேபாளம் மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நேபாளம் நாடு மூலம் இந்தியா மீது சீனா மறைமுக பனிப்போரை நடத்தி வருகிறது.

குழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி!குழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி!

எங்கு அத்துமீறியது

எங்கு அத்துமீறியது

அதேபோல் சீனா சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் உடன் தொடர்ந்து மோதி வருகிறது. ஏற்கனவே சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் சண்டை வந்துள்ளது. கடந்த 10ம் தேதி இந்த சண்டை இரண்டு நாட்டிற்குள் இடையில் வந்தது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மூலம் விரட்டி அடிக்கப்பட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

இப்படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடந்து வரும் நிலையில் இன்றுதான் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன இடங்கள்

என்ன இடங்கள்

சீனா கடந்த 4 மாதங்களில் மட்டும் மொத்தம் 170 முறை இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அதில் லடாக் எல்லையில் மட்டும் மொத்தம் 130 முறை அத்துமீறி உள்ளது. அதேபோல் 40 முறை சிக்கிம் உள்ளிட்ட மற்ற இடங்களில் அத்து மீறி உள்ளது. லடாக்கில் மொத்தம் 110 முறையா 2019ல் அத்து மீறியது. ஆனால் அதை வெறும் 4 மாதங்களில் சீனா தற்போது முறியடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

4 முக்கிய இடங்கள்

4 முக்கிய இடங்கள்

இந்தியாவும் சீனாவும் மொத்தம் 3488 கிமீ தூரத்தை பகிர்ந்து கொள்கிறது. இதில் 80% அத்துமீறல் மொத்தம் 4 இடங்களில் மட்டும்தான் நடந்துள்ளது. அங்குதான் எப்போதும் சீனா அத்து மீறி வருகிறது. அதிலும் லடாக்கின் மேற்கு பகுதியில்தான் அத்துமீறல் அதிகமாக நடந்துள்ளது. 2017ல் 47 முறை லடாக்கில் அத்துமீறிய சீனா தற்போது 130 முறை அத்துமீற தொடங்கி உள்ளது.

எந்த இடங்களில் அத்துமீறல்

எந்த இடங்களில் அத்துமீறல்

அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. இந்த நான்கு இடங்களும் லடாக் மற்றும் சிக்கும் கீழேதான் வருகிறது. இங்குதான் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இந்த பகுதிகள் மூலம் சீனா மிக எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ முடியும் என்கிறார்கள். இங்கு பாதுகாப்பு செய்வதும் மிகவும் கடினம்.

என்ன சவால்

என்ன சவால்

இங்கு படைகளை குவிப்பது சவாலான காரியம். அதிலும் 135 கிமீ நீளம் இருக்கும் பாங்கொங் திசோ நதியில் எளிதாக ஊடுருவலை செய்ய முடியும். இதனால் இந்த இடங்களை ஊடுருவதற்காக சீனா பயன்படுத்தி வருகிறது. மலை அதிகம் உள்ள இடங்கள், நதி உள்ள இடங்களில் சீனா இப்படி ஊடுருவி வருகிறது. இதனால் இங்கு அதிகமாக பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தி வருகிறது.

இனி என்ன நடக்கும்

இனி என்ன நடக்கும்

இதனால் இந்த பகுதியில் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். அங்கு இனி வரும் நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதேபோல் நேபாளம் எல்லையில் படைகள் அதிகம் குவிக்கப்படும். சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதால் சீனா பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என்கிறார்கள்.

English summary
China focuses on 4 LOC border with India for aggression so far .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X