டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு நன்றி கடன்.. 1.70 லட்சம் முழுக் கவச உடையை இலவசமாக அளித்த சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் முழுக் கவச உடையை இலவசமாக சீனா அளித்துள்ளது.

Recommended Video

    சீனா மறைத்த உண்மைகளை வெளியிட்டார் கொரானாவை முதன்முதலில் கண்டறிந்த Dr. Ai Fen

    இந்தியாவில் குழந்தை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி 4 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 3900 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெறும் நான்கு நாட்களில் கொரோனா வைரஸ் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    china gives 1.70 lacks coronavirus safety dresses to india

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேதத்தில் ஆபத்தான நேரத்தில் ஒத்துழைத்த இந்தியாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக 1.7 லட்சம் முழு கவச உடையை இலவசமாக சீனா அளித்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    உள்நாட்டில் 20,000 முழு கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளது . இத்துடன் சேர்த்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் முழு கவச உடைகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.நம் நாட்டில் ஏற்கனவே 3 லட்சத்து 87 ஆயிரத்து 473 கவச உடைகள் உள்ளன. இதுவரை 2.96 லட்சம் கவச உடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    china gives 1.70 lacks coronavirus safety dresses to india

    80 லட்சம் கவச உடைகள் சப்ளை செய்ய சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட போது மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு சீனா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக மருத்துவப் உதாரணங்களை சீனாவுக்கு அனுப்பி வைத்தது. அதற்கு நன்றிக்கடனாக சீனா தற்போது கொரோனா வைரஸ் தடுப்புக்கான முழு கவச உடையை இலவசமாக அளித்திருக்கிறது.

    English summary
    coronavirus outbreak : china gives 1.70 lacks Full apron dress to india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X