டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய சீனா எல்லையில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகையில், ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை உருவாக்கும் வகையில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு சென்று தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தானை சீனா வலியுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஆயுதங்களை கொண்டு செல்லுமாறு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு சீனா கட்டளையிட்டு இருப்பதாக புலனாய்வுக்கு கிடைத்து இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது.

China has instructed Pakistan to send weapons to Jammu kashmir

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இருப்பது இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் செய்தியில், ''எல்லையில் பலத்த பாதுகாப்பு பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதால், தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முடியவில்லை மேலும், ஆயுதங்களையும் கடத்த முடியவில்லை.

தற்போது குளிர்காலத்தை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், அதிகபட்சம் எவ்வளவு ஆயுதங்களை ஜம்மு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல முடியுமோ, கொண்டு செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு சீனா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் சருகுகள் கருகிவிடும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை ஆயுதங்கள் கடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய ராணுவம் செய்துள்ளது. ட்ரோன்ஸ் மூலம் ஆயுதங்களை அனுப்பலாம் என்பதால், எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் அமர்த்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் சீனாவின் வலியுறுத்தலின்பேரில் ட்ரோன்களில் ஆயுதங்களை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.

கைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி கைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜம்முவில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு மஹிந்திரா பொலேரோ வாகனத்தில் ஆயுதங்ககளை கடத்தி வந்துள்ளனர். இவர் அனைத்தும் சீனாவில் தயாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்திய சீனா எல்லையில் இன்னும் பதற்றம் முடிவுக்கு வராத நிலையில், பாகிஸ்தான் வாயிலாகவும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கு சீனா முயற்சித்து இருப்பது இந்தியாவுக்கு எல்லையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Pakistan's spy agency ISI has been instructed by China to execute a plan to flood Jammu and Kashmir with weapons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X