டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மை தெரிஞ்சாகணும்.. வீரர்களை எந்த இடத்தில் கொன்றார்கள்.. 2 கேள்வியுடன் ராகுல் காந்தி அதிரடி டிவீட்

வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்று பிரதமருக்கு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று விடாமல் விரட்டுகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.. எல்லையில் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து ராகுல் காந்தி 2 கேள்விகள் கேட்டுள்ளார்.

அடித்தே கொல்லப்பட்ட நம் வீரர்களை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. சீன பொருட்களை வாங்கவே கூடாது என்று ஆவேசக் குரல்களும் ஒலித்து வருகின்றன. தற்போது இரு நாட்டு உறவிலும் விரிசல் விழுந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யலாம் என்று சீனா கூறியுள்ளது.

 china india: PM has surrendered Indian territory to Chinese aggression, rahul gandhi tweet

இதனிடையே மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது.. ப.சிதம்பரம் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. எல்லை விவகாரம் குறித்து, இந்த 10 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதேபோல, ராகுல்காந்தியும் சம்பவம் நடந்த அன்றே இதை பற்றி கேள்வி எழுப்பினார்.. "எந்த தைரியத்தில் சீனா இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது? பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறார்? என்ன நடந்தது என்று நமக்கு தெரிய வேண்டும். எந்த தைரியத்தில் சீனா நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது? கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ஏன் நிராயுதபாணியாக, உயிர்த்தியாகம் செய்ய அனுப்பப்பட்டார்கள்? எப்படி அவர்கள் நமது நிலத்தை அபகரிக்கலாம்?" என அடுக்கடுக்கான கேள்விகளை பிரதமர் மோடி முன் வைத்திருந்தார்.

சீண்டும் சீனா.. சீண்டும் சீனா.. "பொருள் புறக்கணிப்பு" எளிதானதா.. உண்மையிலேயே என்ன செய்ய வேண்டும் இந்தியா?!

இந்த சமயத்தில்தான், அதாவது நேற்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.. இதில் பிரதமர் பேசும்போது, "இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழையவில்லை.. இந்திய நிலைகள் எதையும் சீன ராணுவம் கைப்பற்றவில்லை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல்காந்தி திரும்பவும் ஒரு ட்வீட் போட்டு, 2 கேள்விகளை கேட்டுள்ளார்.. அதில், "சீனாவின் ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து அவர்களிடம் சரணடைந்துள்ளார் பிரதமர்.

அந்த இடம் சீனாவுடையது என்றால்,

1. ஏன் நமது வீரர்கள் கொல்லப்பட்டனர்?
2. நமது வீரர்கள் எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்? என்று கேட்டுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் கேள்விக்கு மத்திய அரசின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
china india: PM has surrendered Indian territory to Chinese aggression, rahul gandhi tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X