டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் சீன போர் விமானங்கள்.. அதி வேக.. அதி தூர விமானங்களுடன் ரெடியாக இந்தியா.. படங்கள்

எல்லையில் சீன போர் விமானங்கள்.. அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் தயார் நிலையில் இந்தியா.. படங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுப்படுத்தியுள்ள நிலையில் அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் இந்தியாவும் ஆயத்தமாகி வருகிறது.

Recommended Video

    India - china issue | இந்திய எல்லையில் போர் ஜெட்களை இறக்கிய சீனா| Oneindia Tamil

    எல்லையில் விமான தளத்தை சீனா விரிவுப்படுத்துவது தொடர்பாக 3 செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. இவை என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த படங்களாகும். அதில் பங்காங் ஏரியிலிருந்து 200 கி.மீ தொலைவில் சீனா தனது ராணுவ விமான தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

    அந்த படங்கள் திபெத் நக்ரி குன்சா விமான நிலையம் என காட்டுகிறது. முதல் செயற்கைகோள் படம் ஏப்ரல் 6-ஆம் தேதியும் இன்னொரு படம் மே 21 ஆம் தேதியும் எடுக்கப்பட்டுள்ளது.

    லடாக்கில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவி முகாமிட்டிருக்கிறது சீனாவின் படைகள்?லடாக்கில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவி முகாமிட்டிருக்கிறது சீனாவின் படைகள்?

    ராணுவ தளவாடங்கள்

    ராணுவ தளவாடங்கள்

    அதில் மே 21 -ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் தான் சீன ராணுவ விமான தளத்தை தயார் செய்து வருகிறது. அதாவது ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை நிலைநிறுத்துவதற்காக சீனா விமான தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது. அது போல் மூன்றாவதாக எடுக்கப்பட்ட படத்தில் புதிதாக அமைத்த தளத்தில் 4 போர் விமானங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

    போர் திறன்

    போர் திறன்

    அவை ஜே 11 அல்லது ஜே 16 ரக விமானங்கள் என தெரிகிறது. இவை இரண்டுமே நவீன விமானங்களாகும். இந்திய விமான படையின் சுகோய் 30 ரக விமானங்களின் திறன்களை ஒத்தது இந்த சீன விமானங்கள். இவை ரஷ்யாவின் சுகோய் 27 விமானங்களை போல் சீன நாட்டிலேயே தயார் செய்யப்பட்டவையாகும். மிகவும் போர் திறன் கொண்ட விமானங்களாகும்.

    ஆயுதங்கள்

    ஆயுதங்கள்

    இதை எதிர்க்க இந்தியாவும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்கில் போரில் ஈடுபட்டவரும் முன்னாள் இந்திய போர் விமானத்தை இயக்கியவருமான ஓய்வுபெற்ற சமீர் ஜோஷி கூறுகையில் அத்தனை உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களால் எரிப்பொருள்களையும் ஆயுதங்களையும் மட்டுமே கொண்டு வர முடியும்.

    சண்டையிடும்

    சண்டையிடும்

    இத்தகைய உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களால் ஒரு மணி நேரம் கூட அங்கு தாக்கு பிடிக்க முடியாது. நிலப்பகுதிகளில் பல்வேறு விமான தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர் விமானங்களில் எரிபொருளை வானிலேயே நிரப்பிக் கொள்ளும் டேங்கர்களை பயன்படுத்தினால் அவை 3 முதல் 4 மணி நேரத்திற்கு மேல் சண்டையிட முடியும்.

    அதிக நேரம் பறக்கும்

    அதிக நேரம் பறக்கும்

    சுருக்கமாக சொல்வதானால், இந்திய போர் விமானங்கள், சீன போர் விமானங்களை காட்டிலும் அதிக நேரம் பறக்கக் கூடியவை என்றார். கடந்த 1999-ஆம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பிறகு எல்லையில் மிகவும் மோசமான பதற்றமாக இந்தியா- சீனா படைகளின் மோதல்கள் விவரிக்கப்படுகின்றன.

    English summary
    Here are the Satellite images which shows China is expanding its airbase near Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X