• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிரம்மபுத்திரா, மெகோங் ஆறுகள், இலங்கை புதிய நீர்தேக்கங்கள்.. தண்ணீர் யுத்தத்தை விரைவுபடுத்தும் சீனா

|

டெல்லி: 3-வது உலக யுத்தம் என்பது தண்ணீருக்கானதாகவே இருக்கும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. இதனை நிரூபிக்கும் வகையில் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை நாடுகளுக்கும் தண்ணீரை முன்வைத்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனா விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களின் முதன்மையான நதியாக திகழ்கிறது பிரம்மபுத்திரா ஆறு. இது சீனா ஆக்கிரமித்திருக்கும் திபெத்தின் மலைகளில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. நமது நாட்டின் அருணாச்சல், அஸ்ஸாம் வழியாக வங்கதேசத்தை எட்டி வங்காள விரிகுடாவில் கலக்கிறது பிரம்மபுத்திரா ஆறு.

இதேபோல திபெத்தில் பிறப்பெடுத்து இந்தியா வழியாக பாகிஸ்தானை வளப்படுத்துகிறது சிந்து நதி. இதே போல் திபெத் மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணங்கள் வழியாக பாய்ந்து மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியாவை கடந்து தென்சீனா கடலில் கலக்கிறது மெகோங் நதி. இந்த 3 நதிகளை முன்வைத்துதான் சீனா தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

பூட்டான் - சீனா

பூட்டான் - சீனா

தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியாவில் சீனா தமது ஆதிக்கத்தை ஒவ்வொரு வகையிலும் நிலைநாட்ட முயற்சிக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் ஏற்கனவே சீனாவின் பிடியில் சிக்கி உள்ளன. சீனாவின் பிடிக்குப் போகாத வங்கதேசத்தையும் பூட்டானையும் கபளீகரம் செய்வதற்காக இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருக்கிறது சீனா.

வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள்

பூட்டானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்றிவிட்டால் இந்தியாவின் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் விழுங்கிவிடலாம் என்பது சீனாவின் நீண்டகால வியூகம். இதன் ஒருபகுதியாகவே டோக்லாம் மோதல் வெடித்தது; இதன் ஒருபகுதியாக அருணாச்சல பிரதேசத்துக்கு இப்போதும் உரிமை கோருகிறது சீனா.

பிரம்மபுத்திராவுக்கு குறி

பிரம்மபுத்திராவுக்கு குறி

இந்த பின்னணியில் சீனா முன்னெடுத்திருக்கும் மிக முக்கியமான முயற்சிதான் அண்மையில் வெளியான தகவல். சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா நதியை தடுத்து திபெத் பகுதியில் உலகின் மிக பிரமாண்ட அணையை கட்டப் போகிறதாம் சீனா. இந்த பிரமாண்ட அணையின் மூலம் 30,0000 கோடி கிலோ வாட் மின்சாரத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாம் சீனா. சீனாவின் இந்த முயற்சி இந்தியாவை சீண்டுகிற ஒன்றுதான் என்பதில் யாருக்கும் அய்யமில்லை.

மெகோங் நதிநீர் சிக்கல்

மெகோங் நதிநீர் சிக்கல்

இதேபோல் மெகோங் ஆற்று நீரின் போக்கை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் 50% அளவுக்கு குறைத்து விட்டது சீனா என்கின்றர் அமெரிக்க ஆய்வாளர்கள். சீனாவின் இந்த அடாவடியால்தான் மெகோங் ஆற்று படுகையின் கீழ் பகுதி நாடுகளின் கூட்டமைப்பையே அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. மெகோங் ஆற்று படுகையின் மேல் பகுதி நாடாக சீனா இருந்து வருகிறது. தென்சீனா கடல் விவகாரத்தில் ஏற்கனவே தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு முறைத்து கொண்டிருக்கிறது சீனா. ப்போது தைவானை முன்வைத்து சீனா- அமெரிக்கா மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த மோதலை திசைதிருப்பும் வகையில் அமெரிக்கா ஆதரவு நாடுகளை பழிவாங்கும் வகையில் மெகோங் நதியை ஒரு ஆயுதமாகவே சீனா கையில் வைத்திருக்கிறது. அதேபோல் இலங்கையை ஏவல் நாடாக ஏற்கனவே சீனா பயன்படுத்தி வருகிறது.

இலங்கையில் சீனா

இலங்கையில் சீனா

இலங்கையை பொறுத்தவரையில் இன்று மின்சார தேவைக்கும் சீனாவையே சார்ந்திருக்கிறது. சீனாவால் உருவாக்கப்பட்ட நுரைச்சோலை மின்திட்டம் இப்போதும் அத்ன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் சிங்கராஜா வனப் பகுதியில் புதிய நீர்தேக்கங்களை உருவாக்கப் போகிறதாம் இலங்கை. இந்த நீர்தேக்கங்களையும் கூட சீனாதான் கட்டப் போகிறதாம். ஆக மின்சாரத்துக்கும் நீருக்கும் இனி சீனாவை நம்பித்தான் இருக்கப் போகிறது இலங்கை.

தண்ணீர் யுத்தம்

தண்ணீர் யுத்தம்

இது போதாது என்று இப்போது சீனாவிடம் இருந்து 500 மில்லியன் டாலர் கடனாகவும் வாங்கியிருக்கிறது இலங்கை. இது இலங்கை என்கிற நாட்டின் இறையாண்மையை அப்படியே விழுங்கிக் கொண்டிருக்கிறது சீனா என்கிற டிராகன் என்பதையே அப்பட்டமாக காட்டுகிறது. இந்தியாவை பிரம்மபுத்திரா நதியை காட்டியும் தென்கிழக்கு ஆசியாவை மெகோங் நதியை காட்டியும் தண்ணீர் யுத்தத்துக்கு வாய்க்கால் வெட்டிக் கொண்டிருக்கிறது சீனா எனும நாடுபிடி பேராசை கொண்ட தேசம்.

English summary
According to the reports, China is looking the Rivers as War Weapon in South Asia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X