டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ?

அணு ஆயுதத்தை பயன்படுத்தும் கொள்கையை மாற்றிக்கொள்ள தயார் என்று இந்தியா கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா

    டெல்லி: அணு ஆயுதத்தை பயன்படுத்தும் கொள்கையை மாற்றிக்கொள்ள தயார் என்று இந்தியா கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    காஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இன்று காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டம் ரகசியமாக நடக்க உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல் சரியா தவறா என்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    சீனா எப்படி

    சீனா எப்படி

    இந்தியாவின் இந்த அறிவிப்பை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் சீனா இது குறித்து கண்டிப்பாக மற்ற 4 நாடுகளிடமும் கூறும். இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்காது என்று சீனா எச்சரிக்கை விடுக்கும்.

    மோசம்

    மோசம்

    அப்படி சீனா கூறும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு எதிராக திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வேறு இருக்கிறது. இந்தியாவின் வரிக் கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தியா மீது எப்போது வரியை அள்ளி விதிக்கலாம் என்று காத்து இருக்கிறது.

    தானாக மோசம்

    தானாக மோசம்

    தற்போது இந்தியாவே தானாக வந்து அணு ஆயுதம் பற்றி பேசியுள்ளது. அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். கண்டிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் ஆலோசனையில் இன்று இது தொடர்பாக விவாதம் நடக்கும்.

    என்ன ஏற்பாடு

    என்ன ஏற்பாடு

    அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிக் கொண்டு இருந்த வடகொரியா மீது அமெரிக்கா மிக மோசமாக வரிகளை விதித்தது. அதேபோல் பொருளாதார தடையை விதித்தது. இரண்டு நாடுகளும் தற்போது கொஞ்சம் நெருக்கமாக மாறி இருந்தாலும் கூட இன்னும் பொருளாதார தடைகளை அமெரிக்கா முழுதாக விலகிக் கொள்ளவில்லை.

    இந்தியா மீதும்

    இந்தியா மீதும்

    அப்படி இருக்கும் போதே வடகொரியா போலவே இந்தியா மீது எதிர்காலத்தில் இப்படி பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம். இன்றைய ஆலோசனையிலேயே கூட இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தியா தேவையில்லாமல் அணு ஆயுதம் குறித்து பேசி பெரிய சிக்கலில் மாட்டி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    China may talk about India's nuclear policy in today's UNSC meeting on Kashmir issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X