டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவை ஒருபோதும் நம்பக்கூடாது.. மோதலை நினைவு கூர்ந்த 1962ல் போரில் பங்கேற்ற வீரர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: சரியாக 58 வருடங்களுக்கு முன்பு 1962ம் ஆண்டு இந்தியா-சீனா போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், மோதலை நினைவு கூர்ந்ததுடன் சீனாவை எப்போதும் நம்பக்கூடாது என்ற எச்சரித்தனர்.

லடாக்கில் சீன ராணுவ துருப்புகளின் வன்முறையால் ஒரு கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் சீன-இந்தியா எல்லையில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சீனாவை நம்ப வேண்டாம் என ஒரே குரலில கருத்தை தெரிவித்துள்ளனர்.

1962ல் இந்தியா சீனா இடையே போர் வெடித்த போது, கிழக்கு படையில் பணியாற்றிய முன்னாள் விமானப்படை விமானி ஏர் மார்ஷல் பி.டி.ஜெயல் (ஓய்வு பெற்றவர்), 84 வயது. கூறும் போது, தற்போது சீனா ஆக்கிரமிப்பு நடக்கிறது. ஏனெனில் சீனா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாகவும் திறனாகவும் பார்க்கிறது.

எல்லைப் பிரச்சனை

எல்லைப் பிரச்சனை

உலகளாவிய வல்லரசை போல் தன்னை பாவித்துக்கொண்டு இந்தியாவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறது. சீனா கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய நாட்டிலிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது, எனவே அதே முறையில் இந்தியாவிலும் செயல்படுகிறது. எல்லைப் பிரச்சனையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆர்வம் காட்டுகிறது. இதன் மூலம் விரிவாக்க தன்மையைத் தொடர முடியும் என்பதால் விரும்புகிறது என்றார்.

தீர்க்கமான நடவடிக்கை

தீர்க்கமான நடவடிக்கை

இன்று அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கப்படும் முந்தைய வடகிழக்கு எல்லைப்புற அமைப்பில் (NEFA) போரில் தனது பல தோழர்களை இழந்த நாயக் ஜகத் சிங் தசிலா, 82வயது, லடாக்கில் உள்ள வீரர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறினார். "1962 போரின் போது என்னுடன் சண்டையிட்ட எனது பல நண்பர்களை நான் இழந்தேன், ஆகவே, வீரர்கள் இன்று என்ன மாதிரி உணர்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். படையினரின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்துகொள்வது அவசியம், மேலும் அதிகமான வீரர்களை நாம் இழக்காதபடி பரிசீலிக்கப்பட்ட மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்," என்று தசிலா கூறினார்.

பின்வாங்கக்கூடாது

பின்வாங்கக்கூடாது

1962 ஆம் ஆண்டு யுத்தத்தின் மற்றொரு வீரரான ஹவில்தார் கரண் சிங், 82 வயது. "கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த யுத்தம் எங்களுக்கு எதையும் கற்பித்திருந்தால், சீனர்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதே" என்று கூறினார். "இந்த வழியில் செயல்படுவது எப்போதும் சீன இயல்பில் உள்ளது. அவர்கள் நட்பின் கையை நீட்டி பேசுவார்கள். பின்னர் உங்களை கீழே தள்ளிவிடுவார்கள். இதுவும் முன்பு நடந்தது. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை கட்டுப்படுதத இந்தியா முயற்சிக்க வேண்டும், ஆனால் நிலைமை சிறப்பாக மாறாவிட்டால், நாம் வலுவான நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கக்கூடாது, "என்றும் கரண் சிங் கூறினார்.

Recommended Video

    China- உடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
    பதிலடி தேவை

    பதிலடி தேவை

    இதேபோன்ற உணர்வுகளை எதிரொலிக்கும், கர்னல் பிரேம் ஆண்ட்ரூஸ் (ஓய்வு பெற்றவர்), 75 வயது, அவர் 1962 ஆம் ஆண்டு போரில் இந்தியா எதிர்வினையாற்றிய ஒரே எதிர் தாக்குதலாகக் கருதப்படும் வலோங் போர் குறித்து நீண்ட ஆராய்ச்சி செய்தவர் ஆவார். அவர் இந்தியா ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்து அதன் நிலைப்பாட்டை நடத்த வேண்டும் என்று கூறினார். தற்போதைய சூழலில் சீனா ஒரு கொடுமைக்காரா நாடாக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுத்து அதன் எல்லையை நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது. அவர்களால் நம்மை வீழ்த்த முடியாது, அதை நாங்கள் அவர்களுக்குக் காட்ட வேண்டும்" என்று ஆண்ட்ரூஸ் கூறினார்.

    English summary
    China sees itself as a superpower, can’t be trusted: veterans who had participated in the 1962 India-China war, recalled the conflict with Chinese forces 58 years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X