டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி முதல் கருணாநிதி வரை உளவு பார்த்தது சீனா.. ஆனால் தனியார் நிறுவனமாம்- இதுதான் மத்திய அரசு பதில்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், இந்நாள், முன்னாள் முதல்வர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை சீன அரசு நிறுவனமான ஷென்சென் ஷென்ஹூவா உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்பி வேணுகோபால் விளக்கம் கேட்டு இருந்தார்.

இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள், சோனியா காந்தி அவரது குடும்பத்தினர், தற்போது முதல்வர்களாக இருக்கும் மம்தா பானர்ஜி, அமரிந்தர் சிங் உள்பட 15 முதல்வர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சீன நிறுவனம் உளவு பார்த்ததாக கூறப்பட்டு இருந்தது.

சீனாவின் ஊடுருவல்களுக்கு எல்லையில் சரியான பதிலடி தரப்படுகிறது- ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் சீனாவின் ஊடுருவல்களுக்கு எல்லையில் சரியான பதிலடி தரப்படுகிறது- ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங்

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துபூர்வ விளக்கம் அளித்து இருந்தார். அதில், ''இந்தியாவில் சீன நிறுவனம் உளவு பார்த்தது தொடர்பாக இந்திய வெளி விவகாரத்துறையின் மூலம் சீன தூதரகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பீஜிங்கில் இருக்கும் நமது தூதரகமும் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

வெளியுறவுத்துறை

வெளியுறவுத்துறை

ஷென்சென் ஷென்ஹூவா நிறுவனம் தனியார் நிறுவனம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்துடன் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டு

தகவல் திருட்டு

இந்திய குடிமக்களின் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பதில் மத்திய அரசு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. கவனம் செலுத்தி வருகிறது. தனிப்பட்ட நபர்களின் விஷயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அரசுகள் தலையிடுவது குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.

சிறப்பு கமிட்டி

சிறப்பு கமிட்டி

இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும். சட்டத்திற்கு மீறி நடந்து கொண்டுள்ளதா என்பது குறித்து அறிந்து, 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்பும்'' என்று தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதையடுத்து விளக்கம் அளித்து இருந்த காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால், ''எதாவது சட்டத்தை மீறி நடந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இப்படி கேட்பதால் நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிர் ரஞ்சன்

அதிர் ரஞ்சன்

கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து இருந்தார். இதுகுறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கேட்டது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, லோக் சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. ''நாங்களும் ராணுவ வீரர்களுக்கு துணையாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கவும், சீனாவுக்கு எச்சரிக்கை விடுவதற்கும் நேரம் கேட்டு இருந்தோம். ஆனால், மறுக்கப்பட்டுள்ளது என்று அதிர் ரஞ்சன் தெரிவித்தார்.

English summary
China Snooping Row Congress attacks Jaishankar and Reassures safety
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X