டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் அதிவேக "Missile Defence System".. ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் "S-400 Triumph''.. முழு பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே அதி வேகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் S-400 Triumph missile சிஸ்டத்தை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது.

Recommended Video

    India-வுக்கு Russia-வழங்கும் 33 நவீன போர் விமானங்கள்..ஆயுதங்கள்!

    சீனா இந்தியா இடையே கடுமையான மோதல் இருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள், போர் கருவிகளை இந்தியா வாங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இந்தியா 33 போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

    அதேபோல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்க இருக்கிறது. அதிலும் இந்தியா அவசரமாக இந்த ஆயுதங்களை கேட்டு உள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் S-400 Triumph missile system எனப்படும் ஏவுகணை சிஸ்டம்களை இந்தியா ரஷ்யாவிடம் ஆர்டர் செய்து உள்ளது.

    இந்தியா தாக்க வாய்ப்புள்ளது? மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்! இந்தியா தாக்க வாய்ப்புள்ளது? மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. பாக். ராணுவ ஜெனரல் உத்தரவு.. ஷாக்!

    மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் என்றால் என்ன?

    மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் என்றால் என்ன?

    ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள இந்த எஸ்-400 டிரைம்ப் (S-400 Triumph) மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் குறித்து தெரிவித்து கொள்ளும் முன். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்றால் என்ன என்று பார்க்கலாம். மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) என்பது ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அல்லது எதிர் ஏவுகணைகள் அல்லது குண்டுகள் என்று கூறலாம். ஒரு நாட்டை தாக்க வரும் ஏவுகணைகளை, எதிர் ஏவுகணைகள் ஏவி, குண்டுகளை வீசி இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தாக்கி அழிக்க முடியும்.

    எந்த நாடுகள்

    எந்த நாடுகள்

    உலகம் முழுக்க இந்தியா தொடங்கி அமெரிக்கா, ரஷ்யா, தைவான், பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, யுகே மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system)ஐ கொண்டு இருக்கிறது. இந்த மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) பல்வேறு தொழில்நுட்பங்களில் இயங்க கூடியது. ஏஐ தொழில்நுட்பம் தொடங்கி லேசர் தொழில்நுட்பம் வரை பல நுட்பங்கள் மூலம் ஏவுகணைகளை குறி வைத்து , அதை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதம்தான் மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) ஆகும்.

    எஸ்-400 டிரைம்ப் என்றால் என்ன?

    எஸ்-400 டிரைம்ப் என்றால் என்ன?

    இப்படி ஒரு மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் (missile defence system) தான் எஸ்-400 டிரைம்ப் (S-400 Triumph) மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் ஆகும். இந்த எஸ்-400 டிரைம்ப் (S-400 Triumph) ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும். இதன் செயல்பாடு மற்றும் சிறப்பம்சம் குறித்து இனி பார்க்கலாம். எஸ்-400 டிரைம்ப் (S-400 Triumph) என்பது பல பயன்பாட்டு ரேடார் வசதி கொண்ட multifunction radar கொண்ட சிஸ்டம் ஆகும். அது என்ன multifunction radar என்றால் இதில் இருக்கும் ரேடார் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணைகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.

    மூன்று ஏவுகணை

    மூன்று ஏவுகணை

    தானாக ஆட்டோமெட்டிக் முறையில் ஏவுகணைகளை கண்டுபிடித்து, அதை டார்கெட் செய்து, தாக்கி அழிக்கும். மொத்தம் மூன்று விதமான ஏவுகணைகளை ஏவி எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும்.

    வானத்தில் இருந்து குறி வைத்து தாக்கப்படும் அனைத்து விதமான ஏவுகணைகள், ராக்கெட்டுகள், போர் விமானங்கள், ஆள் இல்லாத விமானங்கள் அனைத்தையும் தாக்கும் திறன் கொண்டது ஆகும் இது. இது 400 கிமீ தூரத்தில் இருக்கும் போதே குறி வைத்து தாக்கப்படும். 30 கிமீ தூரத்தில் உள்ள ஏவுகணைகளை கூட எஸ்-400 டிரைம்ப் தாக்கி அழிக்கும்.

    ஒரே நேரத்தில் எத்தனை

    ஒரே நேரத்தில் எத்தனை

    ஒரே நேரத்தில் 36 டார்கெட்களை எஸ்-400 டிரைம்ப் தனது ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கும். ரஷ்யாவின் முந்தைய மிஸைல் டிபன்ஸ் சிஸ்டங்களை விட இது அதிக வேகமானது. வெறும் 5 நிமிடங்களில் இதை தயார் செய்து இதில் இருக்கும் ஏவுகணைகளை ஏவ முடியும். அதேபோல் இதற்கு முன்பே இருக்கும் ஏர்போர்ஸ், ராணுவ மற்றும் கடற்படை தளங்களில் கூட எஸ்-400 டிரைம்பை அமைக்க முடியும்.

    எத்தனை ஏவுகணை உள்ளது

    எத்தனை ஏவுகணை உள்ளது

    எஸ்-400 டிரைம்ப்பில் மொத்தமாக நான்கு விதமான ஏவுகணைகள் உள்ளது. இந்த ஏவுகணைகள்தான் எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டதும் உடனே செயல்பட்டு வானத்தில் பறந்து அதை தாக்கி அழிக்கும். இதில் ஏற்கனவே S-300PMU ஏவுகணை உள்ளது. அதேபோல் 48N6DM (48N6E3), 48N6M இணைக்கப்பட்டுள்ளது. இந்த 48N6M ஏவுகணை நொடிப்பொழுதில் 250 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும். அதேபோல் இதில் இருக்கும் 40N6DM ஏவுகணை 400 கிமீ இலக்குகளை கூட தாக்கி அழிக்கும். AWACS, J-STARS, EA-6B போன்ற மிஸைல் சிஸ்டத்திற்கு எதிரான தொழில்நுட்பத்திற்கு எதிராகவும் எஸ்-400 டிரைம்ப் செயல்படும் திறன் கொண்டது .

    எஸ்-400 டிரைம்ப்பில் இருக்கும் 9M96E மற்றும் 9M96E2 ஏவுகணைகள் மூலம் பூமியில் இருந்து விண்ணில் பறக்கும் இலக்குகளை மிக எளிதாக தாக்கும். மிக வேகமாக செல்லும் போர் விமானங்களை கூட எஸ்-400 டிரைம்ப் எளிதாக தாக்கி அழிக்கும். 9M96 ஏவுகணை அதிகமாக 120கிமீ தூரம் வரை சென்று தாக்கும்.

    கமெண்ட் மற்றும் கட்டுப்பாடு;

    கமெண்ட் மற்றும் கட்டுப்பாடு;

    Ural-532301 என்ற மொபைல் கமெண்ட் தொழில்நுட்பம் மூலம் இந்த எஸ்-400 டிரைம்ப் செயல்பட கூடியது. இதை எளிதாக தேவைக்கு தகுந்தபடி கட்டுப்படுத்த முடியும். முழுக்க முழுக்க ஆட்டோமெடிக் தொழில்நுட்பம் மூலம் செயல்பட கூடியது. இதன் ஆட்டோமெட்டிக் செயல்பாடு தவறாக சென்றால் மேனுவல் மூலமாகவும் குறி வைக்க முடியும். இந்த எஸ்-400 டிரைம்ப் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரேடார் தகவல்களை மற்ற மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் உடன் பகிர்ந்து கொள்ளும் . SA-12, SA-23, மற்றும் S-300 என்ற ரஷ்யாவின் மற்ற மிஸைல் டிபன்ஸ் சிஸ்டம் உடன் இது தகவல்களை பகிர்ந்து கொள்ளும்.

    எஸ்-400 டிரைம்ப் ரேடார்

    எஸ்-400 டிரைம்ப் ரேடார்

    எஸ்-400 டிரைம்ப் சிஸ்டத்தில் 92N6E என்ற இலக்கை குறி வைக்கும் ரேடார் உள்ளது. (இதன் நேட்டோ கோட் பெயர்: Gravestone என்பதாகும்). இந்த ரேடார் MZKT-7930 8×8 vehicle வகையை சேர்ந்தது. இதில் முப்பரிமாண ரோந்து வசதி இடம்பெற்றுள்ளது. இதெல்லாம் தன்னிச்சையாக செயல்பட கூடியது. ஏவுகணைகள், போர் விமானங்கள் , ஆள் இல்லா விமானங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்று அனைத்தையம் இந்த ரேடார் கண்டுபிடித்து தாக்கும் சக்தி கொண்டது.

    எப்போது வரும்

    எப்போது வரும்

    300 டார்கெட்டுகளை ஒரே நேரத்தில் இது கண்டுபிடித்து குறி வைக்க முடியும். இதைத்தான் இந்தியா வாங்க உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் இந்த S-400 Triumph missile system இந்தியாவின் கைக்கு வரும். இதன் மதிப்பு 5.4 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இதற்கான 75% பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து சீனாவும் இதே S-400 Triumph missile systemஐ வாங்கி இருக்கிறது.

    English summary
    China standoff with India: All you need to know about the S -400 anti-missile system from Russia army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X