டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேட்டாக்களை வைத்து சீனாவின் பகீர் முயற்சி.. சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக இந்திய மக்களின் தகவல்களை பயன்படுத்தும் சீனாவின் முயற்சியை முறியடிப்பதை நோக்கமாக கொண்டுதான் இந்தியா. 59 சீன ஆப்களுக்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Chinese Apps Banned-க்கு பிறகு Modi எடுத்த அதிரடி முடிவு | Modi Weibo Post

    லடாக் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பதிலடியாக இந்தியா , 59 சீன ஆப்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. எனினும் எல்லையில் ஆக்கிரிமிப்பில் ஈடுபடும் சீனாவின் செயலுக்கு இதுமிகவும் சாதாரண பதிலடி என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் மத்திய அரசு வட்டார தகவலின் படி, சீன அரசின், கட்டமைப்புகளை தடுக்க ஒரு பெரிய முயற்சியாக இந்த தடை பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக இந்தியர்களின் தகவல்களை(டேட்டாவை) சீனா சேமிப்பதை தடுக்கும் உக்தியாகவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா!! இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா!!

    பாதுகாப்பு துறை

    பாதுகாப்பு துறை

    லடாக்கின் தற்போதைய நெருக்கடியால் தான் இந்திய அரசு , சீனாவிற்கு எதிராக இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததாக எல்லாரும் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. ஏனெனில் இந்திய பாதுகாப்பு துறை கடந்த சில காலமாகவே சீன ஆப்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தது. அதற்கு பின்னால் சில மிக முக்கிய காரணங்களும் உள்ளது

    தொழில்நுட்பங்கள்

    தொழில்நுட்பங்கள்

    சீனாவில் ‘இராணுவ-சிவிலியன் இணைவு' திட்டம் மாவோவின் காலத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பொதுமக்கள் தொழில்நுட்பங்கள், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைகளில் புதுமைகளை சீனா உருவாக்குகிறது. அதாவது இன்றைய தலைமையிடம் மேம்பட்ட தொழில்நுட்பங்களை சீன ராணுவத்திற்காக உருவாக்குவதுடன், அதை சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது. இதை கண்காணித்து செயல்படுத்தும் பணியை தீவிரமாக செய்து வருகிறார் அதிபர் ஜி ஜின் பிங்.

    தொழில்நுட்பங்கள்

    தொழில்நுட்பங்கள்

    அப்படி சீனர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்களை சீனா பயன்படுத்த விரும்புகிறது. இந்தியாவில் இராணுவ மற்றும் அரசியலை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தரவுளை சேகரித்து வருகிறது. அதற்காக தொழில்நுட்பங்களை மேம்படுத்தியும் வருகிறது. இந்திய எல்லைகள் குறித்து மிகப்பெரிய அளவு தரவுகளை சீனா சேகரிக்க விரும்புகிறது. இதன் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த சீனா விரும்புவதாக தெரிகிறது. முன்னதாக ஆப்பிரிக்க நாடுகளில் சீனா தனது தொழில்நுட்பங்கள் மூலம் நிறைய தகவல்களை சேகரித்து அங்கு தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே பாணியில் இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக கூறப்படுகிறது.

    சீன அன்னிய நேரடி முதலீடு

    சீன அன்னிய நேரடி முதலீடு

    சீனாவின் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை பார்த்த அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான விசாக்களைக் குறைக்க சமீபத்தில் முடிவு செய்தது. இந்தியாவின் கவலை என்பது தற்போது சீனாவின் இராணுவ வளர்ச்சியைப் பற்றி மட்டுமல்ல, பொதுமக்கள் மற்றும் ராணுவம் குறித்த தகவல்களை தடுப்பதை பற்றியும் தான் உள்ளது. இதன் காரணமாகவே ஏப்ரல் மாதத்தில் சீன அன்னிய நேரடி முதலீட்டுக்கு முன் இந்திய அரசின் ஒப்புதல் தேவை என்று முடிவெடுக்கப்பட்டது.

    ஏன் சீன ஆப்களுக்கு தடை

    ஏன் சீன ஆப்களுக்கு தடை

    சீன ஆப்களை தடை செய்ய இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு சீன நிறுவனங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், உண்மையில் இந்தியாவின் பணி, கடினமானது. ஏனெனில் குறைந்தபட்சம் இந்த நேரத்தில், இந்தியாவின் தொழில்நுட்பங்களில் சீனாவின் மூலதனத்தை குறைப்பதுதான் இந்தியாவிற்கு முக்கியமானது.

    English summary
    why india Ban china apps, becasue it reflects a larger effort to thwart the Chinese Communist Party's strategy to mine data for both political and military purposes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X