டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைபர் வார்.. இந்தியாவை புதிய வகையில் தாக்க சீனாவின் திட்டம்.. CERTக்கு அனுப்பப்பட்ட வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவின் CERT எனப்படும் கணினி அவசரகால பதில் குழுவிற்கு எச்சரிக்கை சென்றுள்ளது.

Recommended Video

    Australia மீது நிகழ்த்தப்பட்ட Cyber தாக்குதல்... என்ன நடந்தது?

    லடாக் எல்லையில் தற்போது நிலைமை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக மாறியுள்ளது. கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் லடாக்கில் இந்தியா சீனா இடையே கடும் சண்டை வந்தது. இந்திய தரப்பில் கல்வான் சண்டையில் 20 வீரர்கள் பலியானார்கள். 74 வீரர்கள் மோசமாக காயம் அடைந்தனர்.

    சீனா வீரர்கள் மொத்தம் 43 பேர் இதில் பலியானதாக கூறப்படுகிறது. சீனாவின் தரப்பில் இன்னும் பலர் இதில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்தியா-சீனா டென்ஷனை குறைக்க களம் வந்த ரஷ்யா.. வெளியான தகவல் இந்தியா-சீனா டென்ஷனை குறைக்க களம் வந்த ரஷ்யா.. வெளியான தகவல்

    பெய்ஜிங் திட்டம்

    பெய்ஜிங் திட்டம்

    இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவின் CERT எனப்படும் கணினி அவசரகால பதில் குழுவிற்கு எச்சரிக்கை சென்றுள்ளது. இது தொடர்பாக பிரபல சைபர் கிரைம் ஆராய்ச்சி மற்றும் விசாரணை குழு Cyfirma அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக அங்கு குழுக்கள் இயங்கி வருகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சீனாவின் ஹேக்கர்கள் இது தொடர்பாக தீவிரமாக ஆலோசனைகளை செய்து வருகிறார்கள். இந்தியாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். எல்லையில் இந்தியாவை ராணுவம் எதிர்ப்பது போல அவர்கள் இணையம் வழியாக இந்தியாவை தாக்க திட்டமிட்டு வருகிறார்கள். எங்களின் விசாரணையில் இந்த விவரங்கள் வெளியானது.

    எதன் மீது

    எதன் மீது

    இந்தியாவில் இருக்கும் அரசு அமைப்புகள் நிறுவனங்கள் மீது இப்படி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர். முக்கியமாக பாதுகாப்பு துறை அம்சங்கள் மீது சீனாவின் தரப்பு தாக்குதல் நடத்த போகிறது. வங்கிகள் மீதும், தனியார் நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்த சீனா முயன்று வருகிறது. இதனால் இணையத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    பெயர்கள் உள்ளது

    பெயர்கள் உள்ளது

    இதற்காக சீனாவிடம் பெரிய அளவில் பெயர் பட்டியல் இருக்கிறது. இந்திய நிறுவனங்கள், மீடியா கம்பெனிகள், டெலிகாம் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள், அணுமின் மையங்களை கூட சீனா இணையம் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. முக்கியமாக சீனாவின் Gothic Panda மற்றும் Stone Panda ஆகிய ஹேக்கிங் குழுக்கள் இந்த வேலைகளை செய்ய தீவிரமாக களமிறங்கி உள்ளது, என்று அந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எச்சரிக்கை சென்றுள்ளது

    எச்சரிக்கை சென்றுள்ளது

    இது தொடர்பாக இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவின் CERT எனப்படும் கணினி அவசரகால பதில் குழுவிற்கு எச்சரிக்கை சென்றுள்ளது. இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று Cyfirma ஒரு பட்டியலை CERTக்கு அனுப்பி உள்ளது. இதில் விரைவில் CERT முடிவு எடுக்கும் என்கிறார்கள்.

    ஆஸ்திரேலியா எப்படி

    ஆஸ்திரேலியா எப்படி

    இதேபோல் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு துறை தொடங்கி அந்நாட்டு அரசின் பல அமைப்புகள் வரை மாபெரும் ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. அரசின் அனைத்து மட்டங்களிலும் தாக்குதல்கள் நடந்து இருக்கிறது. பல பாதுகாப்பு துறை, நிதித்துறை தொடங்கி அனைத்திலும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்கள் பல நாட்களாக நடக்கிறது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிரத்தன்மை அதிகரித்துள்ளது. அதனால் பாதிப்பும் அதிகம் ஆகியுள்ளது.

    சீனா வாய்ப்பு

    சீனா வாய்ப்பு

    இந்த சைபர் தாக்குதல்கள் காரணமாக சீனாவின் மீது எல்லோரின் கவனமும் திரும்பி இருக்கிறது..ஆஸ்திரேலியா - சீனா இடையே பல நாட்களாக சண்டை இருக்கிறது. தென் சீன கடல் எல்லை தொடங்கி வர்த்தக போர் வரை பல விஷயங்களில் இரண்டு நாட்டிற்கும் மோதல் இருக்கிறது. பொதுவாக சீனா இப்படி உலக நாடுகள் மீது சைபர் தாக்குதலை நிகழ்த்துவது அதிகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: Beijing plans for cyber attack against Delhi warns ethical hackers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X