டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுசுலில் கைப்பற்றிய மலைகளில் இருந்து வெளியேற சொல்லும் சீனா.. இந்தியா கொடுத்த பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: பாங்காங் த்சோவில் கைப்பற்றிய மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்த இந்தியா ஏப்ரல் மாத நிலவரப்படி சீன படைகள் பழைய நிலைக்குதிரும்ப வேண்டும் என்று கோரியுள்ளது. லடாக்கில் எல்ஓசியில் இராணுவ மோதல்களை தீர்க்க புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்தியாவோ, இருவரும் ஒரே நேரத்தில் படைகளை திரும்ப பெறலாம் என்று வலியுறுத்தியுள்ளது. லடாக் எல்லையில் சீன வீரர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா "ஏழு இடங்களை" வசப்படுத்தியது.

ஆகஸ்ட் மாத இறுதியில் சுசுல் சப் செக்டாரில், ரோந்துப் பாய்ண்டுக்கு அப்பால், இந்தியப் படைகள் 7 மலைகளை கைப்பற்றிய பின்னர் சீனா, இந்தியாவிடம் அந்த இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

 பிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை பிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை

தெற்கு கரை இந்தியா

தெற்கு கரை இந்தியா

இந்தியா கைப்பற்றிய மலைப்பகுதிகள் பாங்கோங் த்சோவின் தென் கரையில் உள்ளன. இந்தியாவால் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. இதனால் சீன படையினரால் அங்கு எதுவும் செய்ய முடியாத அளவிற்கு பலமாக இந்தியா உள்ளது. ஆனால் வடக்கு கரையில் சீனா பலமாக உள்ளது.

ஒரே நேரத்தில் வெளியேறுவோம்

ஒரே நேரத்தில் வெளியேறுவோம்

இதனால் தான் சீனா பாங்கோங் த்சோவின் தென் கரையை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியாவிடம் கோரி வருகிறது. இதற்கு இந்தியா, வடக்கு கரையில் இருந்து நீங்கள் ஒதுங்குங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் இருந்த நிலைக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதியில இரு கரையில் இருந்தும் இரு நாடுகளும் ஒரே நேரத்தில் படைகளை விலக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமைதி நிலவுகிறது

அமைதி நிலவுகிறது

கடந்த திங்கட்கிழமை இந்திய மற்றும் சீன ராணுவ தளபதிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மே மாத தொடக்கத்தில் இருந்த நிலைக்கு இருபடைகளும் திரும்பி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது அங்கு அமைதி நிலவுகிறது.

விலகாத மர்மம்

விலகாத மர்மம்

முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவின் "பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளும் அமைதியை விரும்புவதாகவே தெரிவித்தன. ஆனால் சீனாவோ ஏன் திடீரென படைகளை குவித்து ஆக்கிரமித்தது என்பதற்கான காரணங்கள் மட்டும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

சமாதானம்

சமாதானம்

லடாக்கில் வெப்பநிலை குறைந்து வருவதால், இருபுறமும் ராணுவ வீரர்கள் கடுமையான குளிர்காலத்தில் அந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது கடும் சிரமமான காரியம் ஆகும். இப்போதைய நிலையில் சமாதானத்தையே இரு தரப்பும் விரும்புகின்றன.

English summary
INDIA is insisting on simultaneous withdrawal of forces from the Pangong north bank — where Chinese troops have crossed the point which India says marks the LAC — and advanced Indian positions on the south bank to mutually agreed locations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X