டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்ததாக மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்டு இருந்த டாக்குமெண்ட் ஒன்று மத்திய பாதுகாப்பு துறையின் இணைய பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையே லடாக்கில் தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு இன்னும் முழுமையாக அமைதி எட்டப்படவில்லை. மே 5ம் தேதி தொடங்கிய இந்த மோதல் இரண்டரை மாதமாக நீடித்து வருகிறது.

கடந்த ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இந்த சண்டை நடந்தது.

சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா?சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா?

மோதல்

மோதல்

ஆனால் இந்த மோதலுக்கு பின் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, சீனா இந்தியாவின் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை என்று குறிப்பிட்டார். இதை பயன்படுத்திக் கொண்ட சீனா, ஆம் நாங்கள் இந்தியாவின் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. லடாக்கில் நாங்கள் இருக்கும் பகுதிகள் எல்லாம் எங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறியது.

மோடி சர்ச்சை

மோடி சர்ச்சை

மோடியின் இந்த பேச்சு சர்ச்சையாகவே, அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்தது. அதன்படி சீனா எல்லையில் ஆக்கிரமிக்க நினைத்தது. ஆனால் அது முறியடிக்கப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை தவறாக பரப்பி வருகிறார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதோடு இந்திய நிலத்தில் சீனாவின் படைகள் எதையும் ஆக்கிரமிக்க அனுமதிக்கவில்லை. இந்திய படைகள் நிலம் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, என்று விளக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.

இரண்டு நாட்கள்

இரண்டு நாட்கள்

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பாதுகாப்பு துறையின் அதிகாரபூர்வ பக்கத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து டாக்குமெண்ட் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது லடாக் எல்லையில் இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சீனாவின் ஆக்கிரமிப்பு என்று பெயரில் அப்லோட் செய்யப்பட்டு இருக்கும் இந்த குறிப்பில் பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளது.

டாக்குமெண்ட் எப்படி

டாக்குமெண்ட் எப்படி

லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்வான் பகுதியில் மே 5ம் தேதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது . அதிலும் சீனாவின் படைகள் குங்ராங் நாலா, கோக்ரா, பாங்காங் திசோவின் வடக்கு பகுதியில் மே 17-18ம் தேதியில் இருந்து சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலம் எப்படி

நிலம் எப்படி

அதாவது இந்தியாவின் நிலப்பகுதியை சீனாவின் படைகள் ஆக்கிரமித்துள்ளது. இதை முறையாக கவனித்து தடுக்க வேண்டும், என்று முதல்முறை இந்திய பாதுகாப்பு துறை சார்பாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு தொடர்பாக முதல்முறையாக பாதுகாப்பு துறை இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது . இணையத்தில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வந்தனர்.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.இந்த டாகுமெண்ட்டை வெளியிட்டு ராகுல் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதில் ஏன் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல், இணையத்தில் இன்னும் பலர் இதேபோல் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

நீக்கப்பட்டது

நீக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த டாக்குமென்ட் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆக்கிரமிப்பு குறித்து குறிப்பிடப்பட்ட டாக்குமெண்ட் நீக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்தால் ''இணைப்பு காணப்படவில்லை'' என்று காட்டுகிறது. தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த டாக்குமெண்ட் பதிவேற்றப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இந்த டாக்குமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நீக்கப்பட்டுள்ளது.

English summary
China standoff with India: Defence ministry removed the document on PLA aggression in Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X