டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்மார்ட் பாம்.. ரேடாரில் சிக்காது.. இஸ்ரேலிடம் ஸ்பைஸ்-2000 குண்டுகளை வாங்கும் இந்தியா.. பரபர பிளான்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா தற்போது அதி நவீன ஸ்பைஸ் -2000 குண்டுகளை (Spice-2000) வாங்க உள்ளது. இதற்கு பின் பல திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    China -India Border| Israel இடம் இருந்து இந்தியா வாங்கும் அதிநவீன குண்டு

    இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தீவிரமான மோதல் நடந்து வருகிறது. 22 முறை இரண்டு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எல்லையில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

    இந்த நிலையில் உலக நாடுகளிடம் இருந்து இந்தியா நவீன போர் ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்கனவே இந்தியர் ஆர்டர் செய்துள்ளது.

    தீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு!தீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு!

    குண்டுகள்

    குண்டுகள்

    சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா தற்போது அதி நவீன ஸ்பைஸ் -2000 குண்டுகளை (Spice-2000) வாங்க உள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இந்தியா இந்த குண்டுகளை வாங்க உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே இந்த ஸ்பைஸ் -2000 குண்டுகள் உள்ளது. தற்போது கூடுதலாக இந்த குண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. இதற்கு பின் அட்டகாசமான திட்டங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    எமர்ஜென்சி

    எமர்ஜென்சி

    அதிலும் எமர்ஜென்சி அடிப்படையில் இந்திய விமானப்படைக்காக இந்த குண்டுகள் வாங்கப்படுகிறது. மொத்தம் 70 கிமீ தூரம் வரை சென்று இந்த குண்டுகள் தாக்கும் சக்தி கொண்டது. இந்த குண்டுகள் பெரும்பாலும் பங்கர்கள், முகாம்கள், டென்ட்களை அழிக்க பயன்படுத்தப்படும். இதன் சத்தமே இல்லாத தன்மை, குறைவான எடை, அதிக வேகம், அதிக அழிவுத்திறன்தான் இதன் அதிக சக்திக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.

    அதற்குள்ளும் செல்லும்

    அதற்குள்ளும் செல்லும்

    குறிப்பாக இந்த குண்டுகள் இரும்புகளால் போடப்பட்டு இருக்கும் கடுமையான சுவர்களுக்குள் உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தும். இதே குண்டுகளைதான் பாகிஸ்தானில் பாலக்கோடு தாக்குதலின் போதும் இந்தியா பயன்படுத்தியது. இந்த குண்டுகள்தான் அங்கே அதிக சேதங்களை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இதே குண்டுகளை இந்தியா மீண்டும் வாங்க உள்ளது.

    எப்படி தாழ்வாக செல்லும்

    எப்படி தாழ்வாக செல்லும்

    போர் விமானங்களில் மிக தாழ்வாக சென்று இதன் மூலம் தாக்குதல் நடத்த முடியும். இதனால் ரேடாரில் சிக்காமல் ஒரு இடத்தை எளிதாக தாக்க முடியும். இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் எதையும் பாகிஸ்தான் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இதுவும் கூட ஒரு காரணம் ஆகும். விமானத்தில் தாழ்வாக பறந்து இந்த ஸ்பைஸ் 2000 குண்டுகளை போட்டுவிட்டு சுவடே இல்லாமல் அங்கிருந்து சென்று விடலாம்.

    அதிக திறன்

    அதிக திறன்

    இந்த ஸ்பைஸ் 2000 குண்டுகளை ஸ்மார்ட் குண்டுகள் என்று அழைக்கிறார்கள். இது இஸ்ரேலின் ஸ்பைஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும். SPICE என்றால் Smart, Precise Impact மற்றும் Cost-Effective என்பது ஆகும். அதாவது ஸ்மார்ட், துல்லியம், அழிவு, விலை குறைவு என்பதன் சுருக்கம் ஆகும். இது சாதாரண குண்டுகள் போல அல்லாமல் ஜிபிஎஸ் மூலம் கட்டுப்படுத்தப்படும் சிறிய ராக்கெட் என்று கூட கூறலாம்.

    எப்படி கட்டுப்படுத்தலாம்

    எப்படி கட்டுப்படுத்தலாம்

    ஆம் இந்த ஸ்பைஸ் 2000 குண்டுகளை ஜிபிஎஸ் மூலம் கட்டுப்படுத்தி அதை திசை மாற்ற முடியும். சாதாரணமாக இலக்குகளை நோக்கி இதை போடாமல், சில மீட்டர்கள் தூரத்தில் இருந்து கொண்டு இதை ராக்கெட் ஏவுகணை போல இயக்கி தாக்க முடியும். இதனால்தான் இதன் வரவு இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் அளிக்கும் என்று கூறுகிறார்கள். இதுதான் இந்தியா அந்த குண்டை குறி வைக்க காரணம்.

    டெட்லி காம்போ

    டெட்லி காம்போ

    அதோடு இந்த குண்டுகளை ரபேல் விமானத்தில் வைத்து எடுத்து சென்று தாக்கினால் நொடிப்பொழுதில் எதிரி நாட்டு முகாம்களை மிக எளிதாக தாக்க முடியும் என்று கூறுகிறார்கள். ரபேல் மற்றும் ஸ்பைஸ் குண்டுகள் சேர்ந்தால் அது டெட்லி காம்போவாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ரபேலில் 5-6 ஸ்பைஸ் 2000 குண்டுகளை கொண்டு செல்ல முடியும். சுகோய் 30 விமானத்தில் 3 ஸ்பைஸ் 2000 குண்டுகளை கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: Delhi going to buy more Spice 2000 bombs for IAF.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X