டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெத்தாக கால் பதித்தது.. சீனாவின் "உள்நாட்டு அரசியலை" அசைத்து பார்க்கும் இந்தியா.. ஜிங்பிங் கலக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள் குறித்து இந்தியா அடுத்தடுத்து குரல் கொடுப்பது சீனாவிற்கு பெரிய சிக்கலாக முடிந்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் இதை கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்கிறார்கள்.

Recommended Video

    China-வை எரிச்சலடைய செய்யும் India-வின் உள்நாட்டு அடி | Oneindia Tamil

    சரியாக 5 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் தனியார் கல்லூரியில் பேசிய தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவை ஒரு நாடு எதிர்க்கிறது என்றால் அந்த நாட்டை இந்தியா மூன்று வகையில் எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்படி, எல்லையில் முதல் ஆளாக ராணுவத்தை அனுப்பி சண்டை போட முடியும் (offensive), இரண்டாவது எல்லையில் அண்டை நாடுகள் தாக்கினால் அதை திருப்பி தாக்கி தடுக்க முடியும் (defensive), மூன்றாவதாக எல்லையில் எதுவும் செய்யாமல், எதிரி நாட்டின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு, அந்த நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியும் (offensive defensive) என்று குறிப்பிட்டு இருப்பார்.

    ஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்!!ஒற்றர்களின் கூடாரமான சீன தூதரகம்.... பூட்டானில் மூக்கை நுழைக்கும் சீனா... மைக் பாம்பியோ விளாசல்!!

    மூன்று முறைகள்

    மூன்று முறைகள்

    இந்த மூன்றில் ஒன்றின் மூலம் எதிரி நாட்டை வீழத்தலாம் என்று அஜித் தோவல் குறிப்பிட்டு இருந்தார். இதில் இந்தியா எப்போதும் எதிரி நாடு மீது போர் தொடுப்பதை விட, மூன்றாவது முறையான offensive - defensive முறையை கடைபிடித்து வருகிறது. அதாவது பாகிஸ்தானை எல்லையில் தாக்காமல் பலுசிஸ்தான் மூலம் தாக்குவது, நேபாளத்தை நேரடியாக தாக்காமல், அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவது என்று இந்தியா இந்த மூன்றாவது தாக்குதல் முறையை அதிகம் பயன்படுத்தி வருகிறது.

    வங்கதேச அரசியல்

    வங்கதேச அரசியல்

    இதே offensive defensive முறை மூலம்தான் இந்தியா வங்கதேசம் என்ற நாட்டையே உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவையும் தற்போது இந்தியா இதேபோலதான் டீல் செய்கிறது. சீனாவின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தெரிவிக்கும் கருத்துக்கள், சீனாவிற்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. பொதுவாக இந்தியா வெளிநாடுகளின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடாது.

    சீனா சிக்கியது

    சீனா சிக்கியது

    முதல் முறையாக சீனாவின் எல்லை பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை அனைத்திலும் இந்தியா குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் சீனா உரிமை கொண்டாடுவது முழுக்க முழுக்க தவறு. தென் சீன கடல் என்பது சர்வதேச பகுதி. இதை ஒரே ஒரு நாடு உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது என்று இந்தியா முதல் முறையாக கூறியுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா இப்படி பேசி உள்ளது.

    ஹாங்காங் பிரச்சனை

    ஹாங்காங் பிரச்சனை

    அதேபோல் இன்னொரு பக்கம் ஹாங்காங் பிரச்சனையிலும் சீனாவிற்கு எதிராக இந்தியா பேசி உள்ளது. ஐநா சபையிலே ஹாங்காங் பிரச்னையை இந்தியா எழுப்பியது. சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத விஷயமாக இது பார்க்கப்படுகிறது.அதேபோல் ஜப்பான் - சீனா இடையே நிகழும் தீவுகள் தொடர்பான மோதல், தைவான் மோதல், வியட்நாம் மோதல், மலேசியா எல்லை மோதல் என்று அனைத்திலும் சீனாவிற்கு எதிராக இந்தியா குரல் கொடுத்துள்ளது.

    இந்தியா குரலை

    இந்தியா குரலை

    எப்போதும் போல இல்லாமல், சீனாவின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சீனா கொஞ்சமும் நினைக்காத வகையில் இந்தியா தனது வெளியுறவு கொள்கையை மாற்றி உள்ளது. இதை இந்தியாவே ஒப்புக்கொண்டும் உள்ளது. இந்தியா தனது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, இனியும் நாம் அணிசேரா நாடாக இருக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டு இருந்தார்.

    சீனா கருத்து

    சீனா கருத்து

    இந்த நிலையில் இந்தியாவின் எழுச்சியை பார்த்து தற்போது சீனாவின் வெளியுறவுத்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் மோதல் வேண்டாம் என்று சீனா பின்வாங்குவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் சீனா தலையிடாது. இதுவரை நாங்கள் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை குறித்தது பேசியது இல்லை.

    பேச மாட்டோம்

    பேச மாட்டோம்

    இனியும் பேச போவது இல்லை. இந்தியாவும் இதை மதிக்க வேண்டும். தைவான், ஹாங்காங், தென் சீனா பிரச்சனையில் இந்தியா கருத்து கூறும் போது கவனமாக கூற வேண்டும். பிற நாட்டு அழுத்தம் காரணமாக இந்தியா கருத்து கூற கூடாது. சீனாவின் உள்நாட்டு பிரச்சனையே நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று, பெய்ஜிங் கருத்து கூறியுள்ளது.

    English summary
    China standoff with India: Delhi's internal politics inside Beijing shocks countries President Xi Xinping.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X