டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துருவாஸ்டிரா.. இரவோடு இரவாக இந்தியா செய்த 3 ஏவுகணை சோதனை.. சத்தமின்றி நடத்தப்பட்ட அதிரடி மூவ்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா அதிரடியாக மூன்று முறை தனது ஏவுகணை சோதனையை நிகழ்த்தி இருக்கிறது.

இந்தியா - சீனா இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. லடாக் எல்லையில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக 2 கிமீ தூரம் லடாக்கில் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது.

ஆனால் இன்னமும் லடாக்கில் பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் சீனா படைகளை குவித்து வருகிறது. அங்கு சீனா சார்பாக 40 ஆயிரம் படை வீரர்கள் இன்னும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக் இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

இந்த நிலையில் சத்தமே இல்லாமல் இந்தியா அதிரடியாக 3 முறை அடுத்தடுத்து ஏவுகணை சோதனையை நிகழ்த்தி உள்ளது.ஒடிஷாவில் இருக்கும் சாந்திபூர் சோதனை மையத்தில் இந்தியா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது . பாதுகாப்பு ஆராய்ச்சி கழகமான டிஆர்டிஓ மூலம் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

இந்த ஏவுகணைக்கு துருவாஸ்டிரா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. டேங்கர்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஆகும் இது. இதை தரையில் இருந்தும் ஏவி தாக்க முடியும். அதேபோல் ஹெலிகாப்டர், விமானம் மூலமும் ஏவி தாக்க முடியும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதி நவீன டேங்கர்களை தாக்கும் ஏவுகணை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே துருவாஸ்டிராதான் நவீன டேங்கர் கில்லர் ஏவுகணை என்கிறார்கள்.

எப்போது சோதனை

எப்போது சோதனை

இதை சத்தமின்றி சோதனை செய்துள்ளனர் என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது. ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சோதனையை அமைதியாக செய்துள்ளனர். அதாவது சீனாவின் அமைதி பேச்சுவார்த்தை நடந்து 10 நாட்களில் இந்த சோதனையை செய்து இருக்கிறார்கள். அதுவும் இரவோடு இரவாக, இந்த மூன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணிக்கு கூட சோதனை செய்துள்ளனர்.

துருவாஸ்டிரா அதிரடி

துருவாஸ்டிரா அதிரடி

மூன்று முறை மிக துல்லியமாக இந்த துருவாஸ்டிரா ஏவுகணை இலக்கை தாக்கி உள்ளது. மூன்று வெவ்வேறு சோதனைகள், வெவ்வேறு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து தாக்குதல் நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணையை, தரையில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளனர். நாக் ஹெலினா 'Nag Helina'' எனப்படும் இந்திய ஏவுகணையில் அதிரடி மாற்றங்களை செய்து இதையே உருவாக்கி உள்ளனர்.

மிக துல்லியம்

மிக துல்லியம்

இந்த சோதனையில் நம்பிக்கை அளிக்கும் விஷயம், இது மிக வேகமாக செயல்பட்டு உள்ளது. அதேசமயம் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது. மிக வேகமாக இதை இந்தியாவின் டிஆர்டிஓ உருவாக்கி சாதனை செய்துள்ளது. இதை எப்போது இந்தியா ராணுவத்திற்குள் கொண்டு வருவார்கள் என்று தகவல் வரவில்லை. ஆனால் fastrack அடிப்படையில் துருவாஸ்டிரா உருவாக்கப்பட்டு வருவதால், எப்போது வேண்டுமானாலும் இந்திய ராணுவத்தில் துருவாஸ்டிரா புகுத்தப்படலாம்.

English summary
China standoff with India: DRDO three times tested its new state of the art missile in Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X