டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா கடினமான சூழ்நிலையில் இருக்கிறது.. கவனமாக இருக்க வேண்டும்.. ராணுவ ஜெனரல் அதிரடி பேச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மிகவும் கடினமான சூழ்நிலையில், காலத்தில் உள்ளது, தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று இந்திய ராணுவத்தின் ஜெனரல் எம்எம் நராவனே தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக்கில் கடந்த மே 5ம் தேதி சீனா அத்துமீறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. கடந்த வாரம் இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது. ஆனால் இன்னும் பாங்காங் திசோ பகுதியில் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை.

நாங்கள் செய்ததை எல்லாம் மறந்துவிட்டீர்களா? இதுதான் நட்பா?.. நேபாளத்தின் செயலால் கொதிப்பில் இந்தியா!நாங்கள் செய்ததை எல்லாம் மறந்துவிட்டீர்களா? இதுதான் நட்பா?.. நேபாளத்தின் செயலால் கொதிப்பில் இந்தியா!

மிக கடினம்

மிக கடினம்

இந்த நிலையில் இந்தியா மிகவும் கடினமான சூழ்நிலையில், காலத்தில் உள்ளது, தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று இந்திய ராணுவத்தின் ஜெனரல் எம்எம் நராவனே தெரிவித்து இருக்கிறார். இளம் ராணுவ வீரர்கள் முன்னிலையில் பேசிய அவர், நாம் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். இளம் வீரர்கள் மிக கஷ்டமான சூழ்நிலையில் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ராணுவத்தின் ஜெனரல் பேட்டி

ராணுவத்தின் ஜெனரல் பேட்டி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்று உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பெற்றுக்கொண்ட கடினமான பயிற்சிகள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் நடக்க போகும் விஷயங்களை எதிர்கொள்ள நீங்கள் பயிற்சி எடுத்த விஷயங்கள் உங்களுக்கு உதவும். உங்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தியா பெருமை

இந்தியா பெருமை

இந்தியாவின் பெருமையை, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். உயர் ராணுவ அதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிகளிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களிடம் அன்பை செலுத்த வேண்டும். உங்களின் மன உறுதி மட்டுமே நாம் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உதவும். எதிர்காலத்தில் வரும் வீரர்களுக்கு நாம் சரியான எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

என்ன கட்டுப்பாடு

என்ன கட்டுப்பாடு

இந்தியா சீனா எல்லையில் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் நான் உறுதி அளிக்கிறேன். நிலைமை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நாங்கள் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். மேஜர் லெவல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக பல தளங்களில் ராணுவ ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறோம்.

Recommended Video

    கொரோனா வைரஸ்.. என்ன நடந்தது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா
    அமைதி

    அமைதி

    லோக்கல் அளவிலும் கூட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எல்லையில் பல இடங்களில் சீனா படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. இது நேர்மறையான திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் லடாக் எல்லையில் மொத்தமாக அமைதி திரும்பும் என்று நினைக்கிறோம் . அனைத்து பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படும் என்று நினைக்கிறோம்.

    English summary
    China standoff with India: India in tough times says Army General today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X