டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!

இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும், இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும், இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    India-வை சீண்டினால் பதிலடி கொடுப்போம்.. மோடி எச்சரிக்கை

    நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இந்த சண்டை காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்து எல்லையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

    அதை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம்.. 20 வீரர்கள் வீரமரணம் பற்றி ராஜ்நாத் சிங் உருக்கம்..டிவிட்! அதை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம்.. 20 வீரர்கள் வீரமரணம் பற்றி ராஜ்நாத் சிங் உருக்கம்..டிவிட்!

    நேற்று மீட்டிங்

    நேற்று மீட்டிங்

    நேற்று நடந்த கொரோனா தொடர்பாக முதல்வர்கள் ஆலோசனையின் தொடர்ச்சியாக இன்றும் ஆலோசனை நடத்தினார். 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இன்று நடக்கும் மீட்டிங்கில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை தொடங்கும் முன் பிரதமர் மோடி லடாக் சண்டை குறித்து பேசினார்.

    லடாக் எப்படி

    லடாக் எப்படி

    லடாக்கில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து மோடி பேசினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் சக்தி கொண்ட நாடு.இந்தியாவிற்கு அமைதி முக்கியம், ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுப்போம். இந்தியா தனது உரிமைகளை என்றும் விட்டுக்கொடுக்காது. நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது.

    பலம் சக்தி

    பலம் சக்தி

    நமது பலத்தையும், சக்தியையும் நாம் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறோம்.பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்.இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி தக்க பதிலடி கொடுக்கப்டும். இந்திய ராணுவ வீரர்களின் மரணம் வீணாக போகாது.

    தக்க பதிலடி

    தக்க பதிலடி

    அவர்களின் உயிர் தியாகம் வீணாகாது என்று கூறி சீனாவிற்கு பிரதமர் மோடி வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக மாநில முதல்வர்கள் ஆலோசனையில் பிரதமர் மோடி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். எழுந்து நின்று பிரதமர் மோடி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். லடாக்கில் உயிர் நீத்த 20 ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

    English summary
    China standoff with India: India is capable of giving a befitting reply says Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X