டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரில்லா தாக்குதல் படை.. லடாக்கில் களமிறக்கப்பட்ட "Special Mountain Force".. இந்தியா அதிரடி திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா எல்லையில் லடாக் அருகே தற்போது இந்தியா தனது ஸ்பெஷல் மலை பாதுகாப்பு படை எனப்படும் "Special Mountain Force" படையை களமிறக்கி உள்ளது.

Recommended Video

    India China Border : ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?

    இந்தியா - சீனா இடையிலான பிரச்சனை எப்போது முடிவிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையிலான தீவிரமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு இடையே கல்வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது .

    அதேபோல் இன்னும் லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா இன்னும் படைகளை திரும்ப பெறவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை

    இந்தியா களமிறக்கிய படை

    இந்தியா களமிறக்கிய படை

    இந்த நிலையில் தற்போது இந்தியா எல்லையில் லடாக் அருகே தற்போது இந்தியா தனது ஸ்பெஷல் மலை பாதுகாப்பு படை எனப்படும் "Special Mountain Force" படையை களமிறக்கி உள்ளது. அதன்படி லடாக் அருகே இருக்கும் மலை பகுதிகளில் இந்தியா இந்த படைகளை களமிறக்கி உள்ளது. இமயமலை தொடர், கே 2 சிகரத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் இந்த படைகள் களமிறக்கப்பட்டுள்ளது.

    எவ்வளவு தூரம்

    எவ்வளவு தூரம்

    200 கிமீ தூரத்திற்கும் அதிகமான மலை எல்லை பகுதியை இந்த ஸ்பெஷல் படை பிரிவு பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படைப்பிரிவு பல வருடங்களாக மலை பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற படை பிரிவு ஆகும். 10 வருடங்களாக மலைகளில் இவர்கள் சிறப்பு பயிற்சிகளை பெற்று இருக்கிறார்கள். கொரில்லா தாக்குதலில் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள்.

    எல்லை எப்படி

    எல்லை எப்படி

    பொதுவாக சீனாவின் பிஎல்ஏ ராணுவமாக இருந்தாலும் சரி இந்தியாவின் பிஎஸ்பி ராணுவமாக இருந்தாலும் சரி எல்லையில் ரோந்து செல்வதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். இவர்கள் சாலை அமைப்பார்கள், வாகனங்களில் செல்வார்கள். ஆனால் இந்த "Special Mountain Force" படை அப்படி கிடையாது. இவர்கள் கொரில்லா பயிற்சி பெற்றதால் மலை மீது நொடிப்பொழுதில் வேகமாக ஏறி தாக்குதல் நடத்துவதில் வல்லவர்கள்.

    கார்கில் போர்

    கார்கில் போர்

    அதிலும் கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற இவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படையைத்தான் தற்போது இந்தியா எல்லையில் களமிறக்கி உள்ளது. சீனாவின் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் இந்த படையை இந்தியா களமிறக்கி உள்ளது. பல மீட்டர் உயரம் உள்ள மலைகளில், கடுமையான குளிரில் இவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள்.

    பெரிய கஷ்டம்

    பெரிய கஷ்டம்

    இது எந்த அளவிற்கு கஷ்டம் என்றால், பயிற்சி எடுக்கும் போதே இதில் பல வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட், கோர்கா , லடாக், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மலை பகுதிகளில் இந்த படைகள் குவிக்கப்பட்டுள்ளது.இவர்களை மீறி சீனாவின் படைகள் இந்தியாவிற்குள் கால் அடி எடுத்து வைக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள்.

    எப்படி படைகள்

    எப்படி படைகள்

    உலகிலேயே இந்தியாதான் மிக சிறந்த ராணுவ படையை கொண்டு இருக்கிறது என்று சீனாவை சேர்ந்த முக்கியமான ராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மலைகளில் சிறப்பான பாதுகாப்பு படையை கொண்டு இருக்கிறது. மொத்தம் 12 படை பிரிவுகளை கொண்டு உள்ளது. 200,000 படை வீரர்கள் இதில் இருக்கிறார்கள். உலகில் எங்கும் இவ்வளவு பெரிய படை இல்லை, என்று சீனாவின் ராணுவ வல்லுநர்களே குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    China standoff with India: India sends it special mountain force to border attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X