டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளே வந்த "உளவு தேசம்".. இந்தியாவிற்கு இஸ்ரேல் அளித்த அதிரடி வாக்குறுதி.. வசமாக சிக்கும் சீனா!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் எல்லை பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக இஸ்ரேல் களமிறங்கி உள்ளது.

Recommended Video

    China -India Border| Israel இடம் இருந்து இந்தியா வாங்கும் அதிநவீன குண்டு

    இந்தியா - சீனா இடையே எல்லையில் நிலவி வரும் பிரச்சனை உலகம் முழுக்க எதிரொலிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வியட்நாம், இங்கிலாந்து, ஏசியன் நாடுகள் களமிறங்கி உள்ளது.

    எல்லை பிரச்சனையில் ஜப்பானும் இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. இந்தியாவிற்கு இப்படி உலக நாடுகள் எல்லாம் ஆதரவு அளித்து இருப்பது சீனாவிற்கு அச்சத்தை தந்து உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம்.. ஆயுதங்கள் பறிமுதல்... சீனாவின் திட்டம் அம்பலம்!!வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம்.. ஆயுதங்கள் பறிமுதல்... சீனாவின் திட்டம் அம்பலம்!!

    இஸ்ரேல் எப்படி

    இஸ்ரேல் எப்படி

    இந்த நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக இஸ்ரேல் களமிறங்கி உள்ளது. நேற்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெஞ்சமின் காண்ட்ஸ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். போன் மூலம் இவர்கள் முக்கியமான ஆலோசனைகள் செய்தனர். பாதுகாப்பு உபகரண ஒப்பந்தங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்தனர். அதேபோல் இன்னொரு பக்கம் லடாக் மோதல் குறித்தும் இவர்கள் தீவிரமாக உரையாடி இருக்கிறார்கள்.

    முக்கிய ஆயுதங்கள்

    முக்கிய ஆயுதங்கள்

    முக்கியமாக இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது குறித்து இதில் விவாதம் செய்துள்ளனர். ஏற்கனவே இஸ்ரேலிடம் இந்தியா நவீன போர் கருவிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், குண்டுகளை ஆர்டர் செய்துள்ளது. இதை பாஸ்ட்டிராக் அடிப்படையில் வேகமாக இந்தியாவிற்கு வழங்க வேண்டும், ராஜ்நாத் சிங் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் கூடுதலாக ஆயுதங்களை வாங்கவும் இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.

     இஸ்ரேல் கொடுத்த வாக்குறுதி

    இஸ்ரேல் கொடுத்த வாக்குறுதி

    லடாக்கில் சீனா செய்த அத்துமீறல் குறித்து விவாதித்து உள்ளனர்.இதில் இந்தியாவிற்கு இஸ்ரேல் முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உபகரணம் மட்டும் இன்றி ராஜாங்க ரீதியான உதவிகளையும் செய்ய போவதற்காக இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது. அதேபோல் உளவு தகவல்களை கொடுத்து உதவி செய்ய போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    இஸ்ரேல் மொஸாட்

    இஸ்ரேல் மொஸாட்

    உலகில் இருக்கும் முன்னணி உளவு அமைப்புகளில் இஸ்ரேலின் மொஸாட் அமைப்பு முக்கியமானது. அமெரிக்காவின் சிஐஏ அமைப்பில் கூட இஸ்ரேலின் டபுள் ஏஜென்ட்கள் இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பு மிகவும் திறமை வாய்ந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்தியாவிற்கு உளவு ரீதியாக உதவி செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் உடன் சேர்ந்து பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கவும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதில் ஏவுகணைகளை உருவாக்கவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவை பகைத்துக் கொண்டு சீனா என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவிடம் சிக்கிய சீனா தற்போது இஸ்ரேலிடம் வசமாக சிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

    English summary
    China standoff with India: Israel to help Delhi on defense deals and spy information soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X