டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியை தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி சரண்டர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சீனா இடையே லடாக்கில் கடுமையான மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. மே 5ம் தேதி தொடங்கிய இந்த மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கல்வானில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இந்த சண்டை நடந்தது.

யோகா செய்யுங்கள்.. கொரோனாவை வீழ்த்துங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி உரை யோகா செய்யுங்கள்.. கொரோனாவை வீழ்த்துங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி உரை

ராகுல் காந்தி டிவிட்டில்

ராகுல் காந்தி டிவிட்டில்

இந்தநிலையில் பிரதமர் மோடியை தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி சரண்டர் மோடி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டில், அது நரேந்திர மோடி இல்லை சரண்டர் மோடி என்று ஆங்கிலத்தில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். லடாக்கில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறி அதன்பின் அதற்கு மறுப்பு விளக்கம் அளித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி இப்படி டிவிட் செய்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ஜப்பான் டைம்ஸ் இதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு அவர் இந்த டிவிட்டை செய்துள்ளார்.

சீனா திட்டமிட்டு

சீனா திட்டமிட்டு

அந்த ஜப்பான் டைம்ஸ் கட்டுரைக்கு "சீனா மீதான இந்தியாவின் சமாதானக் கொள்கை அம்பலம் ஆனது'' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் சீனாவுடன் இந்தியாவின் சமாதான பேச்சுகள் எதுவும் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி வெளியான கட்டுரை ஆகும் இது. அதில், கடந்த ஒரு மாதமாக சீன லடாக் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

தொடர்ந்து சீனா அங்கு கட்டுமானங்களை குவித்து வருகிறது. சீனாவின் பிஎல்ஏ ராணுவம் படைகளை இறக்கி உள்ளது. வலிமை வாய்ந்த ஆயுதங்களையும் அங்கே கொண்டு வந்து இருக்கிறது. நிறைய கேம்புகள், டென்ட்களை சீனா அமைத்துள்ளது. ஆனால் இந்தியா இதற்கு எதிராக எதுவும் பெரிதாக செய்யவில்லை. இந்த படைகள் குவிக்கப்பட்ட தொடக்கத்தில் இந்தியா அதற்கு பெரிய அளவில் பதிலடி கொடுக்கவில்லை.

மோடி கவனிக்கவில்லை

மோடி கவனிக்கவில்லை

சரியாக சொல்ல வேண்டும் என்றால் சீனா இப்படி ஆக்கிரமிப்புகளை செய்யும் என்று பிரதமர் மோடி நினைக்கவில்லை. அவரின் திட்டங்களை அவரின் நம்பிக்கை மேக மூட்டம் போல மறைத்துவிட்டது. சீனாவிடம் சமாதானமாக சென்றால் அவர்கள் எல்லையில் அத்துமீற மாட்டார்கள். பாகிஸ்தான் உடன் உறவை வைத்துக் கொள்ள மாட்டார் என்று மோடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது படி நடக்கவில்லை.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அதன்பின்பும் எல்லையில் மோசாமான் அத்துமீறல் நடந்தது. இரண்டு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. டோக்லாம் பேச்சுவார்த்தைக்கு தீர்வு வந்துவிட்டது என்று இந்தியா மட்டுமே சொல்கிறது. ஆனால் இன்னமும் டோக்லாம் பகுதியில் சீனா கட்டுமானங்களை செய்துதான் வருகிறது. இந்தியாவை வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் ராகுல் காந்தி ஷேர் செய்துள்ளார்.

English summary
China standoff with India: It is not Narendra Modi, It is Surender Modi says Rahul Gandhi in his tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X