டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த "கடைசி" மாற்றம்!

லடாக்: லடாக் எல்லையில் இருந்து சீனாவின் படைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தில் இருந்தும் வெளியேறி இருக்கிறது.

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் எல்லையில் இருந்து சீனாவின் படைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தில் இருந்தும் வெளியேறி இருக்கிறது.

லடாக்கில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. லடாக் எல்லையில் கடந்த மே 5ம் தேதி சீனாவின் ராணுவம் முதல் முறையாக அத்துமீறியது. அதை தொடர்ந்து எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பை செய்தது.

கல்வான், டெப்சாங், பாங்காங் திசோ ஆகிய பகுதிகளில் தொடர்ந்து சீனாவின் ராணுவம் அத்துமீறி வந்தது. அதில் கல்வான் பகுதியில் மொத்தமாக சீனாவின் ராணுவம் கடந்த மாதம் 15-16 தேதிகள் இந்திய எல்லைக்குள் வந்து அத்துமீறியது.

மிக மோசம்

மிக மோசம்

லடாக் எல்லையில் நடந்த இந்த மோதலில் சீனாவின் ராணுவம் வீரர்கள் 40+ பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவம் வீரர்கள் 20 பேர் இதில் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர் நடக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது. இரண்டு நாட்டு தரப்பும் அடுத்தடுத்து எல்லையில் படைகளை குவித்தது. அதிலும் கல்வான் பகுதியில் பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வந்தது. அங்கு ஆக்கிமிரத்து கட்டுமானங்களை கட்டி வந்தது.

என்ன திருப்பம்

என்ன திருப்பம்

இந்த நிலையில் புதிய திருப்பமாக லடாக் எல்லையில் நேற்று முதல் நாள் அதிகாலை சீனா தனது படைகளை திரும்ப பெற்றது. கல்வான் பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்த பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம். இவர்கள் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின் இந்த முடிவு எட்டப்பட்டது.

வேறு எங்கு

வேறு எங்கு

இந்த நிலையில் மற்ற இடங்களில் இருந்தும் சீனாவின் ராணுவம் படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. அதன்படி ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 15ல் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. மேலும் கோக்ரா என்று அழைக்கப்படும் என்று கட்டுப்பாட்டு பகுதி 17ல் இருந்தும் சீனா 2 கிமீ பகுதிக்கு படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. கட்டுப்பாட்டு பகுதி 16 ஏற்கனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.

பாங்காங் திசோ

பாங்காங் திசோ

அதேபோல் ஆச்சர்யம் தரும் வகையில் பாங்காங் திசோவின் பிங்கர் 4 கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தும் சீனா வெளியேற தொடங்கி உள்ளது. இங்கு இருக்கும் 3 மற்றும் 4 பிங்கர் கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா அத்துமீறி கட்டுப்படுத்தி வந்தது. இந்த இரண்டில் இருந்தும் சீனா வெளியேறி உள்ளது. இங்கு இருக்கும் டென்ட்கள் மட்டும் மற்றும் முகாம்கள் நீக்கப்பட்டு உள்ளது.

அடக்கமாக இருக்கிறது

அடக்கமாக இருக்கிறது

இந்த நிலையில் சீனா தற்போது எல்லையில் அடக்கமாக அவர்கள் எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது சீனாவின் எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அவர்களின் ராணுவம் சென்றுள்ளது. மொத்தமாக சீனாவின் ராணுவம் கல்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, பாங்காங் திசோ ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.

மொத்தம் எப்படி

மொத்தம் எப்படி

இதற்கான சோதனைகளை தற்போது எல்லையில் இந்திய ராணுவம் செய்து வருகிறது. சீன படைகள் மொத்தமாக எல்லையில் வாபஸ் வாங்கிவிட்டதா என்று எல்லையில் இந்திய ராணுவம் சோதனை செய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து நேரடியாகவும் , ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்திய ராணுவம் சோதனை செய்து வருகிறது. இதுவரை செய்யப்பட சோதனைகளின் அடிப்படையில் சீனா பேச்சுவார்த்தைக்கு பணிந்தது எல்லையில் இருந்து பின்வாங்கி உள்ளது.

English summary
China standoff with India: PLA completely pull off from the incursion areas in Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X