டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார்.

லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. சீனாவுடனான இந்த பிரச்னையை மிக எளிதாக எல்லையில் இந்தியா எதிர்கொண்டு, அதை ஏறத்தாழ இந்தியா முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.அங்கு சீனா அடுத்தடுத்து தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறது.

கல்வான் பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் டெப்சாங் மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் எல்லையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார். அதில், இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. எல்லையில் மிக நெருக்கமாக இருக்கும் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான முன்னேற்றம் நடந்து வருகிறது.

பெரிய மாற்றம்

பெரிய மாற்றம்

எல்லையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கு படைகளை பின்வாங்கி வருகிறார்கள். பெரிய அளவில் பணிகள் நடந்து வருகிறது. இது நலன் அறிகுறி. தற்போது நடக்கும் முன்னேற்றம் இவ்வளவுதான் அறிவிக்க முடியும். எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இதற்கு மேல் இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தூதர்

தூதர்

இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனா தூதர் சன் வெய்டாங் கருத்து தெரிவித்துள்ளார். அதில். எல்லையில் நல்ல அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இரன்டு தரப்பும் படைகளை திரும்ப பெற்று வருகிறது. முன்னணியில் எல்லையில் இருந்த படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகிறது . பேச்சுவார்த்தை மூலம் இந்த சண்டை சரி செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

ஆனால் இன்னும் எல்லையில் சீனா முழுமையாக படைகளை திரும்ப பெறவில்லை. அங்கு பாங்காங் திசோ பகுதியில் பிங்கர் எண் 3ல் இருந்து சீனா படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இன்னும் பிங்கர் 4 ல் இருந்து சீனா இன்னும் படைகளை திரும்ப பெறவில்லை . அங்கு குறைந்த எண்ணிக்கையில் சீனா இன்னும் படைகளை வைத்து உள்ளது. இந்த படைகள் விரைவில் திரும்ப பெறப்பட வாய்ப்புள்ள்ளது .

English summary
China standoff with India: Situation is getting better says Foreign Minister Jai Shankar on the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X