டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன பட்டாசுகளுக்கு வேட்டு வைத்த இந்தியர்கள்.. தீபாவளி விற்பனை ரூ 72 ஆயிரம் கோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இந்த முறை சீன பட்டாசுகளை பொதுமக்கள் வாங்காததால் தீபாவளி விற்பனை ரூ 72 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

குண்டூசி முதல் பட்டாசு வரை சீன தயாரிப்புகள் உலகெங்கும் ஆக்கிரமித்து வருகின்றன. குறைந்த விலையில் கண்கவர் வண்ணங்களில் கிடைப்பதால் மக்கள் இதை விரும்பி வாங்குகிறார்கள்.

இந்த நிலையில் சீன வீரர்கள் கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்தனர். அப்போது சீன வீரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

மும்பையில் மகிழ்ச்சி- 3 மாதத்தில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700 ஆக குறைந்தது மும்பையில் மகிழ்ச்சி- 3 மாதத்தில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700 ஆக குறைந்தது

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்திய- சீனா நல்லுறவை பேணிக் காப்போம் என மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியும் - சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

ஆனால் அதை சீனா மீறியதால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் பொதுமக்களிடம் ஏற்படுத்தியது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து தகவல்களை பகிர்ந்தனர்.

ரூ 72 ஆயிரம் கோடி

ரூ 72 ஆயிரம் கோடி

இதன் தாக்கம் எங்கு தெரிந்ததோ இல்லையோ தீபாவளி பண்டிகையில் தெரிந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ 72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதே சமயம் சீன பொருட்களை வியாபாரிகளும் பொதுமக்களும் புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ 40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை

டெல்லி, மும்பை

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நொய்டா, கொச்சி ஆகிய 20 நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்துக் கொண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்த தகவல் தெரிந்தது.

English summary
People started boycotting China products and it reflects more on Diwali. There is 40,000 crore loss for China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X