டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா ராணுவம்!

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களை சீன ராணுவ அதிகாரிகள் இன்று ஒப்படைக்க உள்ளனர்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வனப்பகுதிக்கு சென்ற 5 இந்தியர்கள் வீடு திரும்பவில்லை. இவர்கள் அனைவரையும் சீனா ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனப்பகுதிக்குச் சென்று தப்பியவர்கள் தெரிவித்தனர்.

China to hand over 5 Missing Indians from Arunachal Pradesh, says Minister Kiren Rijiju

இது தொடர்பாக ராணுவத்திடமும் புகார் கொடுக்கப்பட்டது. லடாக் கிழக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீனா ராணுவத்துடனான மோதல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதலில் கருத்து தெரிவித்த சீனா ராணுவமும், அருணாச்சல பிரதேசம் எங்களது தெற்கு திபெத் பகுதி என கூறியது.

லடாக், டோக்லாம் வரிசையில் அடுத்து அருணாசலப் பிரதேசம்? 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்லடாக், டோக்லாம் வரிசையில் அடுத்து அருணாசலப் பிரதேசம்? 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்

அருணாசலப்பிரதேசத்தில்.. சீன ராணுவத்தால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்.. போலீஸ் தீவிர விசாரணைஅருணாசலப்பிரதேசத்தில்.. சீன ராணுவத்தால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்.. போலீஸ் தீவிர விசாரணை

இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!

தெற்கு திபெத் என கொக்கரிப்பு... அருணாசலப் பிரதேசத்தை இன்னொரு லடாக்காக மாற்ற முயற்சிக்கிறது சீனா?தெற்கு திபெத் என கொக்கரிப்பு... அருணாசலப் பிரதேசத்தை இன்னொரு லடாக்காக மாற்ற முயற்சிக்கிறது சீனா?

இதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. பின்னர் 5 இந்தியர்களும் தங்களது பகுதியில் இருப்பதாக சீனா ராணுவம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த 5 பேரையும் நாளை ஒப்படைக்க சீனா ராணுவ அதிகாரிகள் முன்வந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண் ரிஜிஜு, 5 இந்தியர்களையும் ஒப்படைப்பதாக சீனா ராணுவம் உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் 5 பேரையும் செப்.12 சனிக்கிழமை அன்று எந்த நேரத்திலும் சீனா ராணுவத்தினர் ஒப்படைப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

எந்த இடத்தில் ஒப்படைப்பு?

இதனிடையே கிபிது அருகே உள்ள வாச்சா என்ற இடத்தில் 5 இந்தியர்களையும் சீனா ராணுவம் இன்று ஒப்படைக்க இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Union Minister Kiren Rijiju said that China Army will hand over the Five Indians who were missing from Arunachal Pradesh on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X