டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெற்கு திபெத் என கொக்கரிப்பு... அருணாசலப் பிரதேசத்தை இன்னொரு லடாக்காக மாற்ற முயற்சிக்கிறது சீனா?

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாசல பிரதேசத்தை தங்களது தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி கொக்கரித்திருக்கிறது சீனா. இதன்மூலம் அருணாசலப் பிரதேசத்தையும் இன்னொரு மோதலுக்குரிய லடாக் பிராந்தியத்தைப் போல சீனா மாற்ற முயற்சிக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    அருணாசலப்பிரதேசம் தெற்கு திபெத்தாம்.. சீனாவின் அடாவடித்தனம்

    லடாக் எல்லையில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டது. மே மாதத்தில் தொடங்கிய இந்த விவகாரம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    அது அருணாசலப் பிரதேசம் இல்லையாம்...தெற்கு திபெத்தாம்.. சீனாவின் திமிர்வாதம் அது அருணாசலப் பிரதேசம் இல்லையாம்...தெற்கு திபெத்தாம்.. சீனாவின் திமிர்வாதம்

    அருணாச்சல பிரதேசத்தில் வாலாட்டும் சீனா

    அருணாச்சல பிரதேசத்தில் வாலாட்டும் சீனா

    20 இந்திய வீரர்களின் வீரமரணத்துக்குப் பின்னரும் சீனாவின் ஊடுருவல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பதிலடிகளால் சீனா திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் திடீரென அருணாசலப் பிரதேசத்தை குறிவைத்து வாலாட்டி வருகிறது சீனா.

    இந்தியர்களை கடத்திய சீனா

    இந்தியர்களை கடத்திய சீனா

    அருணாசலப் பிரதேசத்துக்குள் ஊடுருவி 5 இந்தியர்களை கடத்திச் சென்றது சீனா. எல்லை தாண்டி சீனா நிகழ்த்தியிருக்கும் இந்த ஊடுருவல் அருணாசலப் பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஒரு வாரமாகியும் 5 பேரின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.

    திமிர்த்தனமான பதில்

    திமிர்த்தனமான பதில்

    இது தொடர்பாக சீனாவிடம் இந்திய தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த நாடு சொன்ன பதில் உக்கிரத்தை அதிகரித்திருக்கிறது. அருணாசலப் பிரதேசம், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாம்.. தெற்கு திபெத்தாம்.. சொந்த நாட்டு மக்களை நாங்கள் ஏன் கடத்தப் போகிறோம் என நையாண்டி பதில் தந்துள்ளது.

    லடாக்கை போல அருணாச்சல பிரதேசம்

    லடாக்கை போல அருணாச்சல பிரதேசம்

    1962 யுத்தத்தின் போது லடாக்கின் வடகிழக்கையும் அருணாசலப் பிரதேசத்தையும்தான் ஒருசேர குறிவைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சீனா மேற்கொண்டது. யுத்தத்துக்குப் பின்னர் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து பின்வாங்கியது சீனா. ஆனால் லடாக்கின் வடகிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்து அக்சாய்சின் என அழைத்துக் கொண்டிருக்கிறது.

    டென்ஷனில் வடகிழக்கு மாநிலங்கள்

    டென்ஷனில் வடகிழக்கு மாநிலங்கள்

    இந்தியாவின் அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் அருணாசலப் பிரதேசத்துக்குப் போனாலே, ஆட்சேபனை தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது சீனா. இந்த நிலையில் லடாக்கைப் போல அருணாசலப் பிரதேசத்தையும் பதற்றப் பகுதியாக்கும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் சீனா, மியான்மருடன் எல்லையை பகிர்ந்திருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அச்சம் நிலவுகிறது.

    English summary
    China is trying to create Tension in Arunachal Pradesh like Ladakh region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X