டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.. அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா சீனா எல்லைப் பகுதியான லடாக் போர் மேகம் சூழ்ந்து பதட்டத்தோடு காணப்படுகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    எல்லையை நெருங்கிய சீன ராணுவம்.. தயார் நிலையில் பீரங்கிகள்.

    இந்த நிலையில் அந்த வான் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து பார்த்தால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன தரப்பு, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்திய எல்லைப் பகுதிக்கு மிக நெருக்கமாக படைகளை குவித்துள்ளது தெளிவாக புரிகிறது.

    வந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்! வந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்!

    பீரங்கிகள்

    பீரங்கிகள்

    ராணுவ வாகனங்கள், 16 பீரங்கிகள், லாரிகள், பூமியை தூண்டக்கூடிய இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அங்கு இருப்பதும் செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு இந்திய தரப்பும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

    அத்துமீறல்

    அத்துமீறல்

    "பதுங்கு குழிகள், ராணுவ வீரர்கள் மற்றும் இயந்திர துப்பாக்கி இடமாற்றங்கள் ஆகியவற்றை படத்தில் காணலாம், இது சீனர்கள் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தற்காப்புக்கு, தயார்படுத்தியுள்ளனர் என்பதையும் காட்டுகிறது" என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    மூன்று கி.மீ

    மூன்று கி.மீ

    லடாக்கின் கிழக்கு பகுதியில் சில பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி முகாமிட்டு உள்ளதாக மற்றொரு பரபரப்பு தகவல் முன்னணி ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது. கோக்ரா, பெட்ரோலிங் பாயிண்ட் 14, பாயிண்ட் 15 ஆகியவை எல்லைப் பிரச்சினை இல்லாத பகுதிகள். ஆனால் அங்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சீன ராணுவம் உள்ளே புகுந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கை கலப்பு

    கை கலப்பு

    அதேநேரம் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து உள்ளதாக கூறப்படும் தகவலை பற்றி இந்திய ராணுவம் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இரு நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது என்பதை உறுதி செய்திருந்தது.

    English summary
    Chinese having deployed towed artillery and mechanised elements on their side of the LAC opposite the Galwan valley.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X