டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் ஊடுருவியதா சீனா? பாஜகவின் தபீர் காவ் ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் சீனா ராணுவம் ஊடுவியதாக பாஜக மூத்த தலைவர் தபீர் காவ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அருணாசல பிரதேசத்தின் அன்ஜாவ் மாவட்டத்தில் சீனா ராணுவத்தினர் மரப்பாலம் ஒன்று அமைப்பதாக கூறி செப்டம்பர் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியவர் தபீர் காவ். ஆனால் அப்போது ராணுவம் இப்புகாரை மறுத்தது.

Chinese Troops Came 12 Km Into Arunachal Pradesh, says BJP’s Tapir Gao

தற்போது தபீர் காவ் மீண்டும் சீனா ராணுவத்தின் ஊடுருவல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அருணாசலப் பிரதேசத்தின் அன்ரெல்லா பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர்.

இப்பள்ளத்தாக்கில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில் சுமார் 12 கி.மீ தொலைவுக்கு சீனா ராணுவம் ஊடுருவியிருந்தது. அத்துடன் வனப்பகுதிகளில் சீனாவின் எல்லைப் பகுதி என்கிற பேனர்களையும் கட்டியிருக்கின்றனர்.

மேலும் அங்கிருந்த இந்திய ராணுவத்தினர் முகாம்களை காலி செய்துவிட்டு திரும்ப வேண்டும் என்றும் சீனா ராணுவத்தினர் மிரட்டியிருக்கின்றனர் என்றார். எல்லைகளை சரியாக வரையறை செய்யாமல் போனால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் என கூறுகிறார் தபீர் காவ்.

சல்பர் ஜாஸ்தி.. காரம் தூக்கல்.. ஆனா எகிப்து வெங்காயம் இதயத்திற்கு இதமானது.. செல்லூர் ராஜு செம!சல்பர் ஜாஸ்தி.. காரம் தூக்கல்.. ஆனா எகிப்து வெங்காயம் இதயத்திற்கு இதமானது.. செல்லூர் ராஜு செம!

சீனாவின் ஊடுருவல் தொடர்பான வீடியோ, புகைப்படங்களும் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

English summary
BJP Senior leader Tapir Gao has said that Chinese Troops Came 12 Km Into Arunachal Pradesh during July-August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X