டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ போராட்டத்தில் தவறில்லை.. ஆனால் வேறு இடம் பாருங்கள்.. ஷாகீன் பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் போராடும் போராட்டக்காரர்கள், மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில போராடுவது குறித்து, ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஷாஹீன் பாக் போராட்டமும்... பின்னணியும்

    டெல்லி: டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் போராடும் போராட்டக்காரர்கள், மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில போராடுவது குறித்து, ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பின் இந்த போராட்டம் நிற்கும் என்று பாஜக எதிர்பார்த்த நிலையில், தற்போதும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதியில்தான் இந்த போராட்டம் நடக்கிறது.டெல்லி தேர்தலில் இந்த போராட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது. மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் இந்த போராட்டத்திற்கு அதிகரித்து வருகிறத.

     சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம் சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.கடந்த ஒரு மாதமாக ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மனுக்கள்

    இரண்டு மனுக்கள்

    மொத்தமாக இரண்டு மனுக்கள் இதில் தொடுக்கப்பட்டது. அதன்படி பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த போராட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஷாணி, ஷாகீன் பாக் போராட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி நொய்டா சாலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இன்று விசாரணை

    இன்று விசாரணை

    இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதன் விசாரணை இன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில், இந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. 50 நாட்களாக நீங்கள் போராட்டத்தை சகித்துக் கொண்டீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் வழக்கு முடியும் வரை நீங்கள் பொறுமை காக்கலாம்.

    என்ன சொன்னார்கள்

    என்ன சொன்னார்கள்

    ஒரு சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்வது தவறு இல்லை. அது மக்களின் உரிமை. போராட்டம் என்பது அடிப்படை உரிமை. ஆனால் அதையே எங்கே செய்ய வேண்டும் என்று இருக்கிறது. டெல்லியில் மிக முக்கியமான சாலையில் 50 நாட்களாக போராட்டம் செய்கிறார்கள். இதனால் மக்கள் கஷ்டப்படுவார்கள். நீங்கள் இங்கு போராடினால், பக்கத்து தெருவில் வேறு விஷயத்திற்காக வேறு சிலர் போராட்டம் செய்வார்கள். இதை ஏற்க முடியாது.

    வேறு இடம்

    வேறு இடம்

    நீங்கள் வேறு இடத்தை போராட்டத்திற்கு தேர்வு செய்ய வேண்டும். வேறு இடத்தில போராட்டடம் நடத்த வேண்டும். இதற்காக போராட்டக்காரர்களுடன் ஒரு குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய்ய் ஹெஹ்டே, சத்னா ராமச்சந்திரன் ஆகியோர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம். போலீசும் இவருக்கு போராட வேறு இடம் வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    நீக்கம் வேண்டும்

    நீக்கம் வேண்டும்

    இங்கு இருக்கும் சாலை தடுப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். இப்படி செய்தால்தான் போராட்டக்காரர்களை மக்களும் மதிப்பார்கள். அவர்களுக்கும் இது ஒரு வகையில் சாதகமாக இருக்கும். ஆனால் இந்த போராட்டத்திற்கு இப்போது இடைகால தடை விதிக்க முடியாது. வேறு இடத்தில போராடுவது குறித்து, போராட்டக்காரர்கள் ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    English summary
    Choose some other place other than Shaheen Bagh to protest says SC in the case today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X