டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடாப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன.

யேசுபிரான் பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். வீடுகளில் வண்ண அலங்கார குடில்கள் அமைத்தும் புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாடினர்.

Christians Celebrated Christmas around the world

உலகின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கத்தோலிக்கர்களின் தலைநகரமான வாடிகன் நகரம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து பங்கேற்றனர்.

யேசு பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின. இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். ஹாங்ஹாங்கில் கிறிஸ்துமஸ் பேரணியில் வன்முறைகள் வெடித்தன.

இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி கதீட்ரல் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.

வடகிழக்கு மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கர்நாடகாவின் பெங்களூருவில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவாவின் பனாஜியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சாலை விழிப்புணர்வு பிரசாரத்துடன் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், நாகை வேளாங்கண்ணி, நெல்லை பாளையங்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட பல இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. அப்போது கிறிஸ்துமஸ் நற்செய்திகள் வாசிக்கப்பட்டன.

English summary
The Christmas festival was celebrated by the Christians around the world
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X