டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா?

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை:நிர்மலா சீதாராமன்.!| E cigarettes Banned

    டெல்லி: இ சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை பல்வேறு விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

    அமெரிக்காவில் இ சிகரெட் புகைப்பழக்கத்தால் 7 மாணவர்கள் உயிரிழந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதேநேரத்தில் இந்தியாவில் புகையிலை விவசாயிகளைப் பாதிக்கும் இ சிகரெட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

    Cigarettes Not Banned; E-cigarettes Are Now Banned

    இந்நிலையில் டெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை இ சிகரெட்டுகளுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இ சிகரெட் தயாரிப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    அதேபோல் புகையிலை மூலமான சிகரெட் தயாரிப்புகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இ சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகளைப் போலதான் புகையிலை தயாரிப்பு சிகரெட்டால் உருவாகிறது.

    இ சிகரெட்டை தடை செய்வதற்கான அத்தனை காரணங்களும் புகையிலை தயாரிப்பு சிகரெட்டுகளுக்கும் பொருந்தும். ஆகையால் பொதுவாக அனைத்து வகை பீடி, சிகரெட் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்கிற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

    நாடு முழுவதும் இ சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை.. நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புநாடு முழுவதும் இ சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை.. நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு

    மற்றொரு வகையில் புகையிலை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இ சிகரெட்டுகளுக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புகையிலை விவசாயிகளின் கோரிக்கையை அரசு மதித்து நடந்துள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

    English summary
    The Centre today banned on the manufacturing, sale of e-cigarettes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X