டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பிப். 28-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,09,63,259 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 21,70,420 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 Cinema halls permitted to operate at higher seating capacity

உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பொதுவாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.

இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்த தளர்வுகளுடனான லாக்டவுன் பிப்ரவரி 28-ந் தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்சென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்

திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.

நீச்சல் குளங்கள் முழுமையாக இயங்கலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து போக்குவரத்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள்' ஆகியவற்றுடன் 2021 பிப்ரவரி 1 முதல் 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கக்கூடிய உத்தரவு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.

கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாகும்.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:

* மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்பட வேண்டும்.

* இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

சரியான கொவிட் நடத்தை வழிமுறைகள்:

* சரியான கொவிட் நடத்தை வழிமுறையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல்:

கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே கீழ்கண்ட நடவடிக்கைகள் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளோடு அனுமதிக்கப்படும்

* அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமூக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவை சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

* 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இன்னும் அதிகம் பேர் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.

* விளையாட்டு வீரர்களுக்கு நீச்சல் குளங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.

* வர்த்தகக் கூட்டங்களில் தளர்வுகள் குறித்த நிலையான செயல்பாட்டு வழிமுறையும் அறிவிக்கப்படும்

* சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளும் நிலைமையை பொருத்து தளர்த்தப்படும்.

பயணக் கட்டுப்பாடுகள்:

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. எந்த தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.

ஆரோக்கிய சேது:

ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

அனைத்து விதிகளூம் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

English summary
Union Home Ministry issues an order to enforce guidelines for surveillance, containment & caution which will be effective from Feb 1 to Feb 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X