டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: 60 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Recommended Video

    மார்ச் 22ம் தேதி காலை 7 முதல் இரவு 9 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் - மோடி வேண்டுகோள்

    கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலியில் உரையாற்றி வருகிறார்.

    அவர் கூறுகையில், கொரோனா வைரஸால் மார்ச் 22-ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அன்றைய தினம் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

    பதற்றம்

    பதற்றம்

    இது மக்களுக்காவே அவர்கள் பிறப்பித்துக் கொள்ளும் ஊரடங்கு உத்தரவு ஆகும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பில் நாம் எப்போதும் மெத்தனமாக இருக்கக் கூடாது. அடுத்த சில வாரங்களுக்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாமல் மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

    தாக்கம்

    தாக்கம்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் பணிக்கு வர முடியாத ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டாம். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் போரை போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபத்தான சூழல்

    ஆபத்தான சூழல்

    யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள். நோய் தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள்.கொரோனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என நினைக்காதீர்கள். யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள். நோய் தொற்றையும் பரப்பாதீர்கள். ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    சரிவு

    சரிவு

    உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டும் குறைக்கப்பட்டும் உள்ளது. இதனால் அந்தந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்திக்கும் நிலை உள்ளது.

    English summary
    PM Narendra Modi address the nation about coronavirus safety measures that citizens above 60-65 of age should not come out of house for good.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X