டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து வங்க அகதிகளுக்கு முன்னுரிமையா? குடியுரிமை மசோதா மீதான சந்தேகங்களும் மத்திய அரசின் பதில்களும்

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் குறைகள்... எதிர்ப்பிற்கான காரணம்

    டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான பல்வேறு கற்பிதங்களைப் பட்டியலிட்டு அதற்கு மத்திய அரசு பதில்களை வெளியிட்டுள்ளன.

    லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. ராஜ்யசபாவில் இன்று இம்மசோதா தாக்கல் செய்ய உள்ளது.

    இந்நிலையில் குடியிருப்பு மசோதா தொடர்பான பல்வேறு சந்தேகங்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்

    இந்து வங்காளிகளுக்கு முன்னுரிமை?

    இந்து வங்காளிகளுக்கு முன்னுரிமை?

    கேள்வி: இந்து வங்காளிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகத்தான் குடியுரிமை மசோதாவா?

    பதில்: வங்காள இந்துக்கள் அனைவரும் இம்மசோதா அடிப்படையில் அப்படியே இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த ஆறு சிறுபான்மை மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வருகிறது. மத அடிப்படையில் தாங்கள் வசித்த நாடுகளில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதால் அகதிகளாக வந்தவர்கள் என்ற மனிதாபிமான அடிப்படையில் இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.

    அஸ்ஸாம் ஒப்பந்தத்துக்கு எதிரானதா?

    கேள்வி: அஸ்ஸாம் ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்கிறதா குடியுரிமை திருத்த மசோதா?

    பதில்: 1971-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தை எந்த வகையிலும் இம்மசோதா நீர்த்துப் போகச் செய்யாது. அதே நேரத்தில் சட்டவிரோத குடியேறிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் அல்லது தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கவும் இம்மசோதா வழிவகை செய்யும்.

    பூர்வகுடிகள் நிலைப்பாடு

    கேள்வி: அஸ்ஸாம் பழங்குடி மக்களின் நலன்களுக்கு எதிரானதா குடியுரிமை திருத்த மசோதா?

    பதில்: அஸ்ஸாமை மையமாக வைத்து இம்மசோதா கொண்டுவரப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த தேசத்துக்கும் பொருந்தும் வகையில்தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பூர்வகுடி மக்களை சட்டவிரோத குடியேறிகளிடம் இருந்து பாதுகாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு நடைமுறைக்கு எதிரானது அல்லது இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா.

    வங்காளிகள் பாதுகாப்புக்கா?

    வங்காளிகள் பாதுகாப்புக்கா?

    கேள்வி: வங்க மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியதா இம்மசோதா?

    பதில்: இந்து வங்காளிகள் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கில் குடியேறிவிட்டனர். அஸ்ஸாமில் வங்க மொழி 2-வது ஆட்சி மொழியாக அமலில் உள்ளது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில், இந்து வங்காளிகள் குறிப்பிட்ட சில இடங்களில்தான் வசிக்கின்றனர். அவர்களும் அஸ்ஸாம் மொழியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

    அஸ்ஸாமில் வங்காளிகள்

    கேள்வி: அஸ்ஸாம் மக்களுக்கு வங்காளிகள் பெரும் சுமையா?

    பதில்: குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்பது ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. பிறநாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு அஸ்ஸாமில் குடியேறாத அகதிகளுக்கானது. நாட்டின் பிற பகுதிகளில் இந்த அகதிகள் தங்கியுள்ளனர்.

    புதிய இடப்பெயர்வா?

    புதிய இடப்பெயர்வா?

    கேள்வி: இம்மசோதா மூலம் வங்கதேசத்தில் இருந்து பெருமளவு இந்துக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்வார்களா?

    பதில்: வங்கதேசத்தில் இருந்து பெரும்பாலான சிறுபான்மையினர் இடம்பெயர்ந்துவிட்டனர். அண்மைக்காலமாக வங்கதேசத்தில் இருந்து சிறுபான்மையினர் இடம்பெயர்வது குறைந்துள்ளது. அத்துடன் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னர் குடியேறிய அகதிகளுக்குத்தான் இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வழிவகை செய்கிறது. 2014-க்குப் பின்னர் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது.

    இந்து வங்காளிகளுக்கு நிலம்?

    கேள்வி: பூர்வகுடிகளின் நிலம் பறிக்கப்பட்டு இந்து வங்காளிகளுக்கு கொடுக்கப்படுகிறதா?

    பதில்: அஸ்ஸாமில் இந்து வங்காளிகள் பராக் பள்ளத்தாக்கில் குடியேறிவிட்டனர். இது பூர்வகுடிகளின் நிலப்பகுதிகளில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. பூர்வகுடிகளின் நிலங்களைப் பாதுகாக்கும் சட்டங்களுக்கு முரணாக குடியுரிமை திருத்த மசோதாவில் எதுவும் இடம்பெறவில்லை. இன்னர் லைன் பெர்மிட் மற்றும் அரசியல் சாசனத்தின் 6-வது பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ள மாநிலங்களுக்கு இம்மசோதா பொருந்தாது.

    முஸ்லிம்களுக்கு பாரபட்சம்

    முஸ்லிம்களுக்கு பாரபட்சம்

    கேள்வி: முஸ்லிம்களை தனிமைப்படுத்துகிற பாரபட்சமானதா குடியுரிமை திருத்த மசோதா?

    பதில்: 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் படி எந்த நாட்டைச் சேர்ந்த எந்த மததத்தைச் சேர்ந்தவரும் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். இதனை தற்போதைய மசோதா திருத்தவில்லை. அதேநேரத்தில் 3 நாடுகளில் இருந்து வரும் 6 சிறுபான்மை மதத்தவருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    English summary
    Centre has issued a myth-buster which says that the amendment will not automatically provide citizenship to Bengali Hindus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X