டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய முஸ்லீம்கள் பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு பிரச்சனை இல்லை.. குடியுரிமை சட்டம் பற்றி அமித் ஷா!

குடியுரிமை சட்டம் குறித்து இந்திய முஸ்லீம் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    'Muslims Needn't Worry': Amit Shah In Parliament On Citizenship

    டெல்லி: குடியுரிமை சட்டம் குறித்து இந்திய முஸ்லீம் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த மசோதா லோக்சபாவில் நேற்று முதல் நாள் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் மசோதாதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

    பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!

    என்ன சட்டம்

    என்ன சட்டம்

    இந்த மசோதாவை தாக்கல் செய்து ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டம் மூலம் வடகிழக்கு மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம் இதனால் பாதிக்கப்படாது. திரிபுரா, அசாம் மக்களின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

    என்ன முஸ்லீம்கள்

    என்ன முஸ்லீம்கள்

    இந்திய முஸ்லீம்கள் யாரும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் புதிதாக வரும் பாகிஸ்தான் முஸ்லீம்களை ஏற்க முடியாது. ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் இவர்களை எங்களால் ஏற்க முடியாது.

    இது போன்ற விஷயம்

    இது போன்ற விஷயம்

    இதுபோன்ற விஷயங்களை இந்த அரசு அனுமதிக்காது. ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவில் முஸ்லீம் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம் .

    உங்களுக்கு தெரியும்

    உங்களுக்கு தெரியும்

    இந்த சட்டத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், இது இந்திய முஸ்லீம்களை பாதிக்காது என்று. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் அளிப்பேன். நான் பேசுவதை நீங்கள் அமைதியாக கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Citizenship Amendment Bill: Indian Muslims should not worry about this law says Amit Shah in Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X