டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக்கிங்.. இந்தியாவிற்கு என்ன ஆனது? குடியுரிமை மசோதா பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் விமர்சனம்!

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சர்வதேச செய்தி நிறுவனங்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சர்வதேச செய்தி நிறுவனங்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவிற்கு என்ன ஆனது என்று சில அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளது.

நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை சர்வதேச செய்தி நிறுவனங்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் என்ன சொன்னது

நியூயார்க் டைம்ஸ் என்ன சொன்னது

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்திய அரசு சர்ச்சைக்குரிய பிரிவினையை ஏற்படுத்தும் குடியுரிமை சட்டத்தையே கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மக்கள் மத ரீதியாக பிளவு படுத்தப்படுவார்கள். இந்தியாவில் முதல்முறை இப்படி நடக்கிறது. இதனால் அங்கு பெரிய போராட்டம் நடந்து வருகிறது , என்றுள்ளது.

என்ன கோபம்

என்ன கோபம்

அதேபோல் நியூயார்க் டைம்ஸ் இரண்டும் நாட்கள் முன் இதே மசோதா குறித்து எழுதிய இன்னொரு கட்டுரையில், இந்தியா இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது என்று பொருள்படும் வகையில் தலைப்புடன் கட்டுரை எழுதியுள்ளது. அதில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடி மக்களாக மாற்றப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இஸ்லாம் மதம்

இஸ்லாம் மதம்

இஸ்லாம் மதத்தை தவிர தெற்காசியாவில் இருக்கும் அனைத்து பெரிய மதங்களையும் இந்த மசோதா ஆதரிக்கிறது. அதனால் இந்த மசோதா மிகப்பெரிய அதிர்ச்சி தருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இன்னொரு பக்கம் வாஷிங்டன் போஸ்ட் இதேபோல் இந்த மசோதாவை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை எழுதி உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் என்ன

வாஷிங்டன் போஸ்ட் என்ன

வாஷிங்டன் போஸ்ட் தனது கட்டுரையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மசோதாவை இந்தியா நிறைவேற்றி உள்ளது. மத ரீதியாக குடியுரிமை வழங்க வகை செய்யும் வகையில் முதல் முறை மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மதசார்பின்மை கொண்டு வளர்ந்து வந்த நாடு தற்போது இந்து நாடாக மாறியுள்ளது.

தி போஸ்ட் விமர்சனம்

தி போஸ்ட் விமர்சனம்

பிரபல அமெரிக்க நாளிதழான தி போஸ்ட் நாளிதழில் இந்த மசோதா மூலம் இந்து மதம் உள்ளிட்ட 6 மதங்களை சேர்ந்த அகதிகள் குடிஉரிமை பெறுவார்கள். ஆனால் இதனால் இஸ்லாமியர்கள் நாடு இல்லாமல் தவிப்பார்கள். இதனால் மொத்தம் 200 மில்லியன் இஸ்லாமியர்கள் நாட்டை இழப்பார்கள். இந்தியாவிற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி உள்ளது.

அல் ஜஸீரா கட்டுரை

அல் ஜஸீரா கட்டுரை

அதேபோல் பிரபல சர்வதேச நாளிதழ் அல் ஜஸீரா தனது கட்டுரையில், இந்தியாவின் 64 வருட பாரம்பரியம் இதனால் மாற்றப்படுகிறது. இத்தனை வருடம் இல்லாத குடியுரிமை சட்டம் தற்போது கொண்டு வரப்படுகிறது. இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 தி இண்டிபெண்டன்ட் விமர்சனம்

தி இண்டிபெண்டன்ட் விமர்சனம்

அதேபோல் தி இண்டிபெண்டன்ட் நாளிதழ் இந்தியாவை ஆண்டு வரும் இந்து தேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து வெற்றிபெற்றுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் எளிதாக அங்கு குடியுரிமை பெறுவார்கள்.

English summary
Citizenship Amendment Bill: International Medias and magazines oppose center move against Muslims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X