டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம் LIVE: ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்தம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 8 மணி நேரம் வரை தொடர்ந்து நடந்தது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்றுமுன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இஸ்லாமியர் தவிர்த்து அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

Newest First Oldest First
10:51 AM, 12 Dec

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்தது
8:48 PM, 11 Dec

ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் ஆதரித்தனர்
8:26 PM, 11 Dec

ராஜ்யசபாவில் தற்போது சிவசேனா எம்பிக்கள் பங்கேற்கவில்லை. மசோதா மீதான திருத்தங்களுக்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது.
8:24 PM, 11 Dec

ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
8:06 PM, 11 Dec

குடியுரிமை சட்ட திருத்தத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்பும் முடிவு பற்றி ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு. டிவிஷன் முறையில் நடந்த வாக்கெடுப்பில் தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டாம் என 113 ஓட்டுக்கள். தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என 92 ஓட்டுக்கள் பதிவு.
7:33 PM, 11 Dec

இலங்கையிலிருந்து வரும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இப்போது பிற மூன்று நாடுகளிலிருந்து வருபவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டம் உருவாகுகிறது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் அமித் ஷா விளக்கம்.
6:45 PM, 11 Dec

அரசியல் சாசனத்தின் 14வது பிரிவை குடியுரிமை மசோதா பாதிக்காது. மதரீதியாக நாட்டை பிரித்தது காங்கிரஸ். மத அடிப்படையில் நாட்டை பிரிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதா தேவைப்பட்டிருக்காது. ராஜ்யசபாவில் அமித் ஷா பேச்சு.
6:35 PM, 11 Dec

ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு அமித் ஷா பதில்
6:35 PM, 11 Dec

வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யும் மசோதா இது- அமித் ஷா
4:15 PM, 11 Dec

குடியுரிமை மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்
4:15 PM, 11 Dec

அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கே எதிரானது குடியுரிமை திருத்த மசோதா - வைகோ
3:14 PM, 11 Dec

மூன்று இஸ்லாமிய நாடுகளை நீங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். இதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதுவும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை- ப. சிதம்பரம் .
3:12 PM, 11 Dec

அரசியல் , சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள். இந்த மசோதாவில் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இல்லை. எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தீர்கள்- ப. சிதம்பரம்.
3:12 PM, 11 Dec

அரசியல் , சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள். இந்த மசோதாவில் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இல்லை. எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தீர்கள்- ப. சிதம்பரம்.
3:12 PM, 11 Dec

ஏன் சில நாடுகளை மட்டும் இந்த சட்டத்தில் சேர்த்து உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் அண்டை நாடுகள் அனைத்தையும் சேர்க்க வேண்டியதுதானே. ஏன் மத ரீதியாக அச்சுறுத்தலுக்கு மட்டும்தான் இந்த மசோதா பொருந்துமா. வேறு ரீதியாக மக்களுக்கு பிரச்சனையை வராதா - ப. சிதம்பரம்.
3:11 PM, 11 Dec

ஏன் சில மதங்களை மட்டும் சேர்த்துவிட்டது மற்ற மதங்களை இந்த மசோதாவில் இருந்து நீக்கி உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் எல்லா மதங்களையும் சேர்க்க வேண்டியதுதானே. ஏன் ஒரு மதத்திற்கு மட்டும் இந்த பாகுபாடு - ப. சிதம்பரம்.
3:11 PM, 11 Dec

இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ததை பார்த்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதா எதுவும் நிறைவேறாமல் இருக்க வேண்டும். அதை கண்காணிப்பதே நமது கடமை- ப. சிதம்பரம்.
3:11 PM, 11 Dec

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதா இது - ப. சிதம்பரம்
3:11 PM, 11 Dec

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து ராஜ்ய சபா எம்பி ப. சிதம்பரம் பேசி வருகிறார்
2:05 PM, 11 Dec

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது வருத்தம்: இஸ்லாமியருக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் தேவை. குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்-அதிமுக எம்பி எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியம்
1:24 PM, 11 Dec

அங்கு சென்று பார்த்தால்தான் அவருக்கு அகதிகள் முகாமின் வலி தெரியும் - ஆனந்த் சர்மா
1:24 PM, 11 Dec

அகதிகள் முகாம்களுக்கு அமித் ஷா ஒருமுறையாவது சென்று பார்த்து இருக்கிறாரா? - ஆனந்த் சர்மா
1:24 PM, 11 Dec

அந்த மக்கள் உங்கள் சட்டத்தை பார்த்து பயப்படுகிறார்கள் - ஆனந்த் சர்மா
1:23 PM, 11 Dec

அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது - ஆனந்த் சர்மா
1:23 PM, 11 Dec

வடகிழக்கு மாநிலமே பொங்கி எழுந்துள்ளது - ஆனந்த் சர்மா
1:23 PM, 11 Dec

முஸ்லீம் லீக், இந்து மகா சபா இணைந்துதான் இந்தியாவை பிரித்தது - ஆனந்த் சர்மா
1:23 PM, 11 Dec

இதை ஜின்னா கொண்டு வர, இந்து மகாசபா 1937ல் குஜராத்தில் அறிமுகம் செய்தது. இதை பற்றி அமித் ஷா பேச மாட்டார் - ஆனந்த் சர்மா.
1:23 PM, 11 Dec

இரண்டு நாடு என்ற திட்டத்தை கொண்டு வந்ததே இந்து மகாசபாதான் - ஆனந்த் சர்மா
1:23 PM, 11 Dec

இந்த சட்டத்தின் அடிப்படையை நீங்கள் உடைக்க முயல்கிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் இதை எதிர்க்க விடும். ஆனால் இதை அரசியலாக்க கூடாது - ஆனந்த் சர்மா.
1:23 PM, 11 Dec

அவர்களின் நோக்கை நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள். பாக். பிரிவினைக்கு பின் இந்தியா வந்தவர்களுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது அதில் ஒருவர்தான் டாக்டர் மன்மோகன் சிங், இன்னொருவர் ஐகே குஜ்ரால். இதை யாரும் மறக்க கூடாது- ஆனந்த் சர்மா .
READ MORE

Citizenship Amendment Bill Live Updates: The bill will come for the vote in RS today
English summary
Citizenship Amendment Bill will be discussed and came for the vote in Rajya Sabha today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X