டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை மசோதா.. லைம் லைட்டில் அமித் ஷா.. 2 விவாதத்திற்கும் வராத மோடி.. எங்கே சென்றார்?

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பான இரண்டு அவை விவாதத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பான இரண்டு அவை விவாதத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீருக்கான சிறப்பு அதிகார நீக்கத்திற்கு பின் மத்திய அரசு அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

ஷாக்கிங்.. இந்தியாவிற்கு என்ன ஆனது? குடியுரிமை மசோதா பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் விமர்சனம்! ஷாக்கிங்.. இந்தியாவிற்கு என்ன ஆனது? குடியுரிமை மசோதா பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் விமர்சனம்!

மோடி இல்லை

மோடி இல்லை

ஆனால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது பிரதமர் மோடி அவையில் இல்லை. ஆம் அவர் லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது இல்லை. அங்கு நடந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. லோக்சபாவில் பாஜகவிற்கு மெஜாரிட்டி இருக்கிறது. ஆனாலும் கூட மோடி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

ராஜ்யசபா எப்படி

ராஜ்யசபா எப்படி

நேற்று ராஜ்யசபாவில் நடந்த விவாதத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. பொதுவாக பெரிய விவாதங்கள் சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது மோடி அதில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் பிரதமர் மோடி இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மிகவும் கவனமாக தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்

தேர்தல்

இது இல்லாமல் பிரதமர் மோடி நேற்றும் நேற்று முதல்நாளும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்றும் ஜார்க்கண்டில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.

அமித் ஷாதான்

அமித் ஷாதான்

இந்த மசோதா தொடர்பாக அனைத்து செய்தியிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் முன்னிலைப்படுத்தப்பட்டார். சமீப நாட்களாக பாஜகவில் அமித் ஷாதான் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போதும் கூட அமித் ஷாவின் பெயரே முன்னிலைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Citizenship Amendment Bill: PM Modi wasn't present in both houses during the discussions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X