டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு.. பாரத ரத்னாவை திருப்பி கொடுக்கும் பூபன் ஹசாரிகா குடும்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ரத்னாவை திருப்பிக் கொடுக்க அசாம் பாடகர் பூபன் ஹசாரிகாவின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதன்படி குடியுரிமை மசோதா, மக்களவையில் கடந்த ஜனவரி 8- ம் தேதி குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

Citizenship Amendment Bill painfully unpopular’: Bhupen Hazarika’s son slams Bill

இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இறந்த அசாம் மாநில பாடகர் பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த குடியரசு தினத்தின் போது பாரத ரத்னா விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அரசிடம் இருந்து பெற்ற பாரத ரத்னாவை திருப்பிக் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அதுபோல் மணிப்பூரி திரைப்பட இயக்குநர் அரிபம் ஷ்யாம் ஷர்மாவும் கட்நத 2006-ஆம் ஆண்டு பெற்ற பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

English summary
Assamese singer Bhupen Hazarika's family has decided to turn down the Bharat Ratna that was conferred to him by the Modi government this year, as a mark of protest against the Citizenship Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X