டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவப்பு பட்டனை அழுத்திய வெங்கையா நாயுடு.. திடீரென நிறுத்தப்பட்ட ராஜ்ய சபா ஒளிபரப்பு.. என்ன ஆனது?

மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது திடீர் என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Rajya Sabha live telecast stopped

    டெல்லி: மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது திடீர் என்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

    இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று முதல் நாள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இன்று ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

    என்ன அமளி

    என்ன அமளி

    இந்த நிலையில் ராஜ்யசபாவில் அமித் ஷா பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் எழுந்து நின்று அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமித் ஷா பேசுவது தவறு, அவர் நிறைய உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசுகிறார். இதை அனுமதிக்க கூடாது என்று கூச்சல் போட்டனர்.

    கூடாது

    கூடாது

    இதை சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தார். அமித் ஷா பேசும் போது குறுக்கிட கூடாது. உங்களுக்கு பேச நேரம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசுங்கள். அதுவரை சத்தம் போடாதீர்கள் என்று கூறினார்.

    கேட்கவில்லை

    கேட்கவில்லை

    ஆனால் இதை கேட்காத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சல் இட்டு வந்தனர். இதனால் கோபம் அடைந்த வெங்கையா நாயுடு நீங்கள் அமைதியாக இருக்கவில்லை என்றால், நீங்கள் பேசுவது எதையும் பதிவு செய்ய மாட்டேன். நீங்கள் பேசுவது ஒளிபரப்பும் ஆகாது என்று குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூச்சல் இட்டனர்.

    நாயுடு

    நாயுடு

    இதனால் உடனே வெங்கையா நாயுடு தனது இருக்கைக்கு கீழ் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினார். இது ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு அறைக்கு சிக்னல் எழுப்பும். இதன் மூலம் உடனடியாக அவை நடவடிக்கையின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

    லைவ் இல்லை

    லைவ் இல்லை

    லைவ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் அமித் ஷா பேச்சு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சரியாக 5 நிமிடம் கழித்து மீண்டும் அவை தொடங்கி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்பின் அவையில் பெரிய அளவில் கூச்சல் குழப்பம் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Citizenship Amendment Bill: Rajya Sabha live telecast stopped for few minutes after oppositions ruckus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X