டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவிடம் தரப்பட்ட வெள்ளை சீட்.. அதிமுகவை பார்த்து சிரிப்பு.. நேற்று ராஜ்யசபாவில் என்ன நடந்தது?

நேற்று ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எப்படி நிறைவேறியது, மசோதா வாக்கெடுப்பிற்கு முன் என்ன விஷயங்கள் எல்லாம் நடந்தது என்று முழு விபரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    'Muslims Needn't Worry': Amit Shah In Parliament On Citizenship

    டெல்லி: நேற்று ராஜ்யசபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா எப்படி நிறைவேறியது, மசோதா வாக்கெடுப்பிற்கு முன் என்ன விஷயங்கள் எல்லாம் நடந்தது என்று முழு விபரம் வெளியாகி உள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்புகளை மீறி இரண்டு அவையிலும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகும்.

    இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு வரை பாஜகவிற்கு மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் பாஜக யாருமே நினைக்காத சில விஷயங்களை செய்து இந்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த காட்சிகள் மட்டும் ஆதரவாக வாக்களிக்கவில்லை, இந்த கூட்டணியில் இல்லாதா கட்சிகளும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    ஆம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் வாக்களித்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவையில் 11 ராஜ்யசபா எம்பிக்கள் இருக்கிறார்கள். இது மசோதா நிறைவேற மிக முக்கிய காரணமாக இருந்தது. இதனால்தான் அவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் பதிவானது.

    பலம் இல்லை

    பலம் இல்லை

    மசோதாவிற்கு எதிராக வெறும் 105 வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய முக்கியமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நேற்று ஆதரவாக வாக்களித்து பல்டி அடித்தனர், அல்லது அவைக்கு வராமல் ஆப்சென்ட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

    எப்படி வெளியேறியது

    எப்படி வெளியேறியது

    ஆம் இந்த மசோதாவிற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்கும் என்று கருதப்பட்ட சிவசேனா எந்த வாக்கும் அளிக்காமல் அவையில் இருந்து வெளியேறியது. அதேபோல் மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசிய அசோம் கனா பரிஷத் கட்சி, கடைசியில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது.

    வெளியேறினார்கள்

    வெளியேறினார்கள்

    மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய என்சிபி வந்தனா சவாண் மற்றும் மஜீத் மேமன் ஆகியோர் அவையில் இருந்து வெளியேறினார்கள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நேரடியாக அவையிலே பாஜக தேசிய செயல் தலைவர் எம்பி ஜேபி நட்டாவிடம் பேசினார்.

    சஞ்சய் ராவத்

    சஞ்சய் ராவத்

    அவரின் காதில் எதோ சொல்லிவிட்டு, கை கொடுத்துவிட்டு சஞ்சய் ராவத் அவையில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சிவசேனா எம்பிக்கள் எல்லோரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அதன்பின் பாஜக எம்பி சிஎம் ரமேஷ் அங்கிருக்கும் எம்பிக்கள் உடன் பேசினார். இவர்தான் பாஜகவின் ராஜ்யசபா பொறுப்பாளர்.

    வெள்ளை சீட்

    வெள்ளை சீட்

    நேரடியாக இவர் அதிமுக, பிஜு ஜனதாதளம், பாமக, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் ஆகிய கட்சி எம்பிக்களிடம் பேசினார். அவர்களிடம் பேசிவிட்டு வெள்ளை சீட் ஒன்றில் எம்பிக்கள் எண்ணிக்கையை எழுதினார். பின் அந்த வெள்ளை சீட்டை நேரடியாக சென்று அமித் ஷாவிடம் கொடுத்தார்.

    தண்ணீர் வேண்டும்

    தண்ணீர் வேண்டும்

    அதுவரை இறுக்கமாக இருந்த அமித் ஷா முகம் அப்போதுதான் மலர்ந்தது. அவர் உடனே அதிமுக, பாமக எம்பிக்களை பார்த்து மெலிதாக சிரித்தார். அதன்பின் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார் (அவரின் டேபிளில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது). பாஜக எம்பி ஒருவர் அவருக்கு தண்ணீர் எடுத்து வந்தார். அவரின் காதில் அமித் ஷா ஏதோ கூறினார்.

    பிரேக் எடுத்தார்

    பிரேக் எடுத்தார்

    அதன்பின் சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறிது நேரம் பிரேக் எடுத்தார். அவர் வந்தவுடன் அமித் ஷா அவரை பார்த்து சிரித்தார். இதையடுத்துதான் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியில் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள் பதிவானது. மசோதாவிற்கு எதிராக வெறும் 105 வாக்குகள் மட்டுமே பதிவாகி மசோதா வென்றது.

    English summary
    Citizenship Amendment Bill: What has happened before the bill passing yesterday?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X