டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராட்டம் எதிரொலி.. தலைநகரிலேயே துண்டிக்கப்பட்ட இணையம்.. அலிகார் பல்கலை.க்கு திடீர் விடுமுறை!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் காரணமாக நேற்று டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இணையம் துண்டிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் காரணமாக நேற்று டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இணையம் துண்டிக்கப்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உத்தர பிரதேச மாநில அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றுதான் இந்த போராட்டம் உச்சம் அடைந்தது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளே சென்ற போலீசார் அங்கிருந்த எல்லோர் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். லத்தி கொண்டும், கண்ணீர் புகை குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நடந்த போதுதான் டெல்லியிலும் போராட்டம் நடந்தது.

 போர்க்களமாக மாறிய டெல்லி.. இரவு முழுக்க நடந்த போராட்டம்.. உச்சம் அடையும் குடியுரிமை சட்ட திருத்தம்! போர்க்களமாக மாறிய டெல்லி.. இரவு முழுக்க நடந்த போராட்டம்.. உச்சம் அடையும் குடியுரிமை சட்ட திருத்தம்!

எப்படி

எப்படி

இதனால் போலீசார் இங்கு ஆரம்பத்தில் இருந்து கடுமையாக தாக்குதலை நடத்தினார்கள். முக்கியமாக அங்கு மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இன்னொரு பக்கம் போலீசாரை மாணவர்களை தாக்கினார்கள் என்றும் உத்தர பிரதேச போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கல்லூரி வளாகம்

கல்லூரி வளாகம்

கல்லூரி வளாகத்திற்குள் இன்று இரவு நுழைந்த போலீசார் அங்கிருந்த மாணவர்களை அடித்து உதைத்து, லத்தி மூலம் காயப்படுத்தினார்கள். இது தொடர்பாக வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது. மொத்தமாக லக்னோ முழுக்க நேற்று இரவு இணையம் துண்டிக்கப்பட்டது.

டெல்லி எப்படி

டெல்லி எப்படி

இன்னொரு பக்கம் டெல்லியிலும் சில இடங்களில் இணையம் துண்டிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு டெல்லியில் இப்படி போராட்டம் காரணமாக இணையம் துண்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களை அடுத்து தற்போது டெல்லியிலும் இந்த ஒடுக்குமுறை நிகழ்ந்து இருக்கிறது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 5ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. டிசம்பர் 20ம் தேதி தொடங்க வேண்டிய விடுமுறையை கல்லூரி நிர்வாகம் இப்போதே தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் பிடிவாதம்

மாணவர்கள் பிடிவாதம்

ஆனால் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். நாங்கள் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லவில்லை. இங்குதான் இருக்க போகிறோம் என்று கூறி உள்ளனர். இதனால் இந்த போராட்டம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

English summary
Citizenship Amendment: Internet cuts after students clashes with cops, Aligarh University shuts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X