டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய டெல்லி மாணவர்கள்.. மாஸ் பிளான்.. சென்னை ஐஐடியும் சப்போர்ட்!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest

    டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தற்போது காட்டு தீ போல போராட்டம் பரவி வருகிறது. அசாமில் மூன்று நாட்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இது. 11 மணி நேர அடையாள எதிர்ப்பு பேரணியோடு முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி வருகிறது.

    இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். தற்போது டெல்லி முதல் சென்னை வரை இந்தியா முழுக்க இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    கலவரம் செய்தது தவறு.. மனுவை உடனே விசாரிக்க முடியாது..டெல்லி போலீசுக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதிகலவரம் செய்தது தவறு.. மனுவை உடனே விசாரிக்க முடியாது..டெல்லி போலீசுக்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி

    போராட்டம்

    போராட்டம்

    இந்த சட்டத்திற்கு எதிராக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் நடந்த போராட்டத்தில் பெரிய கலவரமே ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள். இதில் மூன்று பேருந்துகள் கொளுத்தப்பட்டது.

    மாணவர்கள் காயம்

    மாணவர்கள் காயம்

    அதேபோல் 20க்கும் அதிகமானவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். பலர் கை உடைந்து, கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் நேற்று 100க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மாணவர்கள் விடுதலை

    மாணவர்கள் விடுதலை

    இவர்கள் எல்லோரும் இன்று காலைதான் விடுதலை செய்யப்பட்டார்கள். நேற்று இரவு ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டது போலவே உத்தர பிரதேச அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

    மீண்டும் போராட்டம்

    மீண்டும் போராட்டம்

    இந்த தாக்குதலை கண்டித்து தற்போது டெல்லியில் மீண்டும் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர்கள் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் போராடி வருகிறார்கள்.

    எங்கு நடக்கிறது

    எங்கு நடக்கிறது

    டெல்லியில் இவர்கள் இப்போது ஜந்தர் மாந்தர் மைதானத்தை நோக்கி பேரணி நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு சென்னை ஐஐடி மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Citizenship Amendment: Jamia Millia Islamia University started their protest again in Delhi after yesterday's riot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X