டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி போலீஸ் தலைமையகம் முன் குவிந்த மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த போராட்டம்.. தகிக்கும் தலைநகர்!

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று ஜேஎன்யூ மாணவர்கள் போலீஸ் தலைமையகம் முன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பல நூறு பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. இன்று நடந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்திவிடப்பட்டது.

இந்த செயலை செய்தது மாணவர்கள் என்று கூறி போலீசார் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நூலகம் வரை சென்று கூட போலீசார் மாணவர்களை தாக்கினாரால்.

மாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி! மாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி!

போராட்டம்

போராட்டம்

இப்படி மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று டெல்லியில் உள்ள போலீஸ் தலைமையகம் முன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னாள் மாணவர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அழைத்தனர்

அழைத்தனர்

முன்னதாக, இதை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம். எங்கள் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இன்று இரவு 9 மணிக்கு போராட்டம் நடத்த போகிறோம். எல்லோரும் வாருங்கள், என்று ஜேஎன்யூ மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே போல் நடத்தினர்

அதே போல் நடத்தினர்

அதேபோல் சரியாக 9 மணிக்கு மாணவர்கள் எல்லோரும் டெல்லி போலீஸ் தலைமையகம் முன் கூடினார்கள். அங்கு மக்கள் பலரும் கூடினார்கள். மொத்தமாக போலீஸாருக்கு எதிராக கடுமையாக கோஷங்களை எழுப்பினார்கள். இரவு முழுக்க இவர்கள் இந்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

வேறு என்ன

வேறு என்ன

இன்னொரு பக்கம் இன்னும் டெல்லி பல்கலைக்கழகம் உட்பட வேறு சில பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று இரவு அவர்களும் டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Citizenship Amendment: JNU students called for a protest in front of police headquarters today in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X