டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம்.. களமிறங்கிய கமல்.. மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.

துப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தியபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ! துப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தியபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா பார்க்கப்படுகிறது.

என்ன வழக்கு

என்ன வழக்கு

இந்த நிலையில்தான் இதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த வழக்கு மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி அழுத்தம் திருத்தமாக தனது எதிர்ப்பை காட்டி இருக்கிறது .
ஏற்கனவே இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும்.

திமுக எப்படி

திமுக எப்படி

இந்த மசோதாவை ஆதரித்து அவையில் வாக்களித்த அசோம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளது. இன்னும் பல பொது நல வழக்குகள் இதில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் திமுகவும் வழக்கு தொடுக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Citizenship Amendment: Kamal Haasan's Makkal Needhi Maiam goes to SC against the act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X