டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள்.. அமித் ஷாவை பார்த்து பொங்கிய ப.சி.. பொளேர் பேச்சு

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்கிறார்கள், இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜ்யசபாவில் உரையாற்றிய ப.சிதம்பரம்

    டெல்லி: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இன்று ஒரு மசோதாவை தாக்கல் செய்கிறார்கள், இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று முதல் நாள் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மசோதாவிற்கு எதிராக நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த மசோதா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக பேசினார். அமித் ஷாவை பார்த்து இந்த மசோதாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி பாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா? அச்சத்தில் சிவசேனா கூட்டணி

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    ப. சிதம்பரம் தனது பேச்சில், இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதாவை அரசு தாக்கல் செய்ததை பார்த்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இந்த அவை மூலம் தவறான, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மசோதா எதுவும் நிறைவேறாமல் இருக்க வேண்டும். அதை கண்காணிப்பதே நமது கடமை.

    என்ன மதம்

    என்ன மதம்

    ஏன் சில மதங்களை மட்டும் சேர்த்துவிட்டு மற்ற மதங்களை இந்த மசோதாவில் இருந்து நீக்கி உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் எல்லா மதங்களையும் சேர்க்க வேண்டியதுதானே. ஏன் ஒரு மதத்திற்கு மட்டும் இந்த பாகுபாடு.

    சில நாடுகள்

    சில நாடுகள்

    அதேபோல் ஏன் சில நாடுகளை மட்டும் இந்த சட்டத்தில் சேர்த்து உள்ளீர்கள். சேர்ப்பது என்றால் அண்டை நாடுகள் அனைத்தையும் சேர்க்க வேண்டியதுதானே. இலங்கையை சேர்க்க வேண்டியது தானே. ஏன் இந்த பாகுபாடு என்று கூறுங்கள்.

    அரசியல் காரணம்

    அரசியல் காரணம்

    ஏன் மத ரீதியாக அச்சுறுத்தலுக்கு மட்டும்தான் இந்த மசோதா பொருந்துமா. வேறு ரீதியாக மக்களுக்கு பிரச்சனை வராதா. அரசியல் , சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இந்த மசோதாவில் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் இல்லை. எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தீர்கள். மூன்று இஸ்லாமிய நாடுகளை நீங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள். இதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதுவும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

    சட்ட போராட்டம்

    சட்ட போராட்டம்

    இதற்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் நடக்கும். நீதிமன்றம் இந்த மசோதாவை ரத்து செய்யும். நீதிமன்றத்தில் இந்த சட்டம் கண்டிப்பாக தோல்வி அடையும். இது முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு, இந்தியாவில் இது மிக மோசமான நாள் என்று ப. சிதம்பரம் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    இதுவரை முறை

    இதுவரை முறை

    நாம் பிறப்பின் அடிப்படையில், குடும்ப அடிப்படையில், பதிவு அடிப்படையில்தான் குடியுரிமையை தீர்மானிக்கிறோம். அதுவே சிறந்த முறை. ஆனால் இப்போது இந்த அரசு மத ரீதியில் குடியுரிமையை தீர்மானிக்க நினைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஏன் தேர்வு

    ஏன் தேர்வு

    இது என்ன அரசியலமைப்பு சட்டமா இல்லையா. உங்களை இப்படி அநீதி இழைக்கவா தேர்வு செய்தார்கள். மக்களை உங்களை அதற்காக இந்த அவைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Citizenship Amendment: P Chidambaram tears the bills and gave a splendid speech in Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X